பரிசுத்த வேதாகமம் – வரலாறும், சதிகாரர்களும்

 பரிசுத்த வேதாகமம்-

வரலாறும்சதிகாரர்களும்

                                     By M.S.G.ALEX BENZIGER, ATTORNEY

 


1.     இயேசு ஆண்டவர் ஸ்தாபித்த திருச்சபை:- 

     Our Lord Jesus Christ Established the Catholic 

     Church:- 

ஆண்டவராகிய இயேசு இவ்வுலகில் வாழ்ந்த பொழுது தனது 12 சீடர்களில் ஒருவரான அர்ச்இராயப்பரிடம் (St.Peter) "நீ ஒரு பாறை இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்" (.மத்தேயு.16:18-19) என்றார்இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்மற்ற 11 அப்போஸ்தலர்களிடமும் மேற்கண்ட வார்த்தையைச்  சொல்லவில்லைமாறாகஅர்ச்இராயப்பரிடம் (St.Peter)மட்டுமே சொன்னார்ஆகஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதனது 12 அப்போஸ்தலர்களில்அர்ச்.இராயப்பரை மட்டுமே "தனது சபைக்குதலைவராக ஏற்படுத்தினார்மேலும்அர்ச்.இராயப்பரிடம் (St.Peter)" என் ஆடுகளை மேய்(John.21:15-16) என்றும், "என் ஆடுகளை கண்காணி" ( John. 21:17) என்றும் சொல்லி இந்த பூவுலகில்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது காலத்திற்குப் பின்னும் அவர் மனித அவதாரம் எடுத்து வந்த நோக்கம் தொடர்ந்து நடைபெற்றிட வேண்டும் எனவும் எண்ணிதனது சபையை (The Church) அர்ச்இராயப்பர் மீது ஸ்தாபித்தார்அது மட்டுமல்லஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது சீடர்களிடம்,"சகோதரர்களுக்குள்ளே மனத்தாங்கல் ஏற்பட்டால்திருச்சபையிடம் சொல்திருச்சபை சொல் கேளாதவன்புற இனத்தான் போலவும் ஆயக்காரன் போலவும் ஆகக்கடவான் என்றார் (மத்.18:17) இவ்வாறுஆண்டவர் இயேசு ஒரே ஒரு சபையை மட்டுமே நிறுவினார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகை விட்டு பரலோகம் சென்ற பின்பு அப்போஸ்தலர்கள் வழக்கமாக தங்கும் மாடி அறையில் ஏறக்குறைய 120 சகோதரர்கள் கூடியிருக்கையில் (Acts.1:15)  அர்ச்இராயப்பர் (St. Peter)  அவர்கள் நடுவில் எழுந்து நின்று பேசினார்அங்கேஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாளும் (புதிய உடன்படிக்கையின் பெட்டகம்-ஆதி ஆகமம்.3:15ன் படி)  அங்கே இருந்தார்அப்போது பரிசுத்த ஆவி "அக்கினி நாக்குவடிவில் ஒவ்வொரு மேலும் வந்து தங்கியது (Acts.2:3).  இவ்வாறு ஆண்டவர் இயேசுதான் கட்டிய திருச்சபைக்கு பலமளிக்கப்பட்டு சபை உருவானதுஆண்டவர் இயேசு கொலை செய்யப்பட்ட பின் பயந்து ஒளிந்து இருந்த அப்போஸ்தலர்கள் திடன் கொண்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றியும் அவரது போதனைகள் பற்றியும் உலகெங்கும் சென்று போதிக்க திடன் கொண்டு  செயல்பட்டனர்

யூதேயா (Judea) நாட்டில் (இயேசு ஆண்டவர் வாழ்ந்த நாடுஅர்ச்சின்னப்பரும் (St.Paul), அர்ச்பர்னபாவும் (St.Barnabas) விருத்தசேதனம் பற்றிய வாக்குவாதத்திற்கு முடிவு கட்ட,  எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் மற்றும் மூப்பர்களிடம் செல்ல தீர்மானித்துஅங்கே சென்று அவர்களிடம் முறையிட,  அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அந்தியோக்கியா மக்களுக்காக ஒரு கடிதம் எழுதி அர்ச்சின்னப்பர் (St.Paul), அர்ச்பர்னபாஸ் (St.Barnabas), தலைமையில் பர்சபா மற்றும் சீலா ஆகியோரிடம் "எங்களுக்குள் சிலர் அங்கு வந்து தங்கள் பேச்சினால் உங்களை கலக்கமுற செய்து மனதை குழப்பினர் என்று கேள்விப்பட்டோம்இவர்களுக்குநாங்கள் எக்கட்டளையும் தந்ததில்லை(TheActs. 15:24) என்ற கடிதத்தைக் கொடுத்து அனுப்பினர்பின்னர் அர்ச்சின்னப்பர் (St.Paul) தெசலோனிக்கேயருக்குஎழுதிய கடிதத்தில்,"எனவே சகோதரர்களே எங்களிடமிருந்து வாய்மொழியாகவோகடிதத்தின் வழியாகவோ நீங்கள் கற்றறிந்த பரம்பரைப் படிப்பினைகளைப் பற்றிக்கொண்டு நிலையாய் இருங்கள்" (2 தெசலோனிக்கேயர்.2:15) என்றார்.



2.    வேதாகம ஏட்டுச்சுருள்களும் கையெழுத்துப் பிரதிகளும்:-

The Biblical Scrolls and Manuscripts:-

அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சபையை பராமரித்து வழிநடத்தி வந்தனர்பின்னர்இந்த மூப்பர்கள் கி.பி.150 முதல் கி.பி. 340 வரை "வேதம்சம்பந்தமான ஏட்டுச் சுருள்களை  சேகரித்துக் கொண்டிருந்தனர் கிட்டத்தட்ட 300 ஏட்டுச் சுருள்கள் கிடைத்தன.

கி.பி. 67ல் உரோமையில்அர்ச்இராயப்பர் St.Peter: 32-67 A.D. the First Pope) இறந்தபின் ஆண்டவருடைய சபைக்குத் தலைவராக புனித லீனஸ் (2nd Pope-St.Linus:67-76 A.D.) முதல் புனித முதலாம் டமாசுஸ் (37th Pope-St. Damasus I : 366-384 A.D) வரை 37 போப்பாண்டவர்கள் இயேசு ஆண்டவரின் சபையை வழிநடத்தி வந்தார்கள்.  இவ்வாறு ஆண்டவருடைய சபைக்குத்  தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் போப் என்று அழைக்கப்பட்டனர்(Pope என்றால் அப்பா என்பது அர்த்தமாகும்Papa  என்று லத்தினிலும் Pappas என்று  கிரேக்கத்திலும் அழைக்கப்பட்டனர்). 

 கிபி 366ல் போப்பாண்டவராக வந்த St. Damasus பதவியேற்ற பின் கி.பி. 367ல் St. அத்தனேசியஸ் வேதாகமத்தில் 73 புத்தகங்கள் பற்றிய 300 ஏட்டுச் சுருள்களை (வேதாகம நூல்கள்ஆராய்ந்து அவைகளில் 46 புத்தகங்களை பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் என்றும் 27 புத்தகங்களை புதிய ஏற்பாட்டின் நூல்கள் என்றும் ஒரு பட்டியலை போப்பாண்டவரிடம் சமர்ப்பித்தார்இவைகளையே திருச்சபைபையின் வேதாகம நூல்கள் என்று போப்பாண்டவர் St. டமாசுஸ் தீர்மானம் செய்து உத்தரவிட்டார்பழைய வேதாகம சுருள்கள் எபிரேய மொழியிலும்,  புதிய வேதாகம சுருள்கள் கிரேக்க மொழியிலும் இருந்தனஇந்த வேதாகம நூல்கள் எபிரேயகிரேக்க மொழியில் இருந்ததால் எல்லோரும் படித்தறிவது சிரமமான காரியமாக இருந்தது.  எனவேஇந்த வேதாகம நூல்களை ஒரே மொழியில் கொண்டு வந்தால் எல்லோரும் படிப்பதற்கு வசதியாக அமையும் என்று கருதி போப்பாண்டவர் டமாசுஸ் தனது செயலாளராக இருந்த புனித இரோணிமூஸ் என்பவரிடம் பழைய வேதாகமமாக தேர்வு செய்யப்பட்ட 46 நூல்களை எபிரேய மொழியிலிருந்து இலத்தீன் மொழிக்கும்புதிய வேதாகமமாக தேர்வு செய்யப்பட்ட 27 நூல்களை கிரேக்க மொழியிலிருந்து லத்தீன் மொழிக்கும் மொழி பெயர்த்திடுமாறு கி.பி. 382ல் பணித்தார்

 

3. வேதாகம நூல்கள் மொழிபெயர்ப்பு:-

   Translation of the Biblical Manuscripts and the

   Scrolls:-  

St. Siricius, போப்பாண்டவராக இருந்த காலத்தில் கி.பி. 393ல் Synod of Hippo சங்கம் கூட்டப்பட்டதுஇந்த சங்கத்தில் மேற்கண்ட பழைய ஏற்பாட்டு நூல்கள் 46 எனவும்புதிய ஏற்பாட்டு நூல்கள் 27 எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுபின்னர் மேற்கண்ட St. Siricius போப்பாண்டவர் கி.பி. 397ல் கூட்டப்பட்ட கார்த்தேஜ் சங்கத்தில் (Third Council of Carthage)  46+27 ஆக 73 புத்தகங்களின் பட்டியல் உறுதி செய்யப்பட்டனபுனித இரோணிமூஸ் (St. Jerome) போப்பாண்டவர் டமாசுஸ் உத்தரவுப்படி கி.பி. 382ல் பரிசுத்த வேதாகம மொழி பெயர்ப்புப் பணியை ஆரம்பித்து கி.பி. 404ம் ஆண்டு அந்த பணியை முடித்துகி.பி. 405ல் போப்பாண்டவர் முதலாம் இன்னோசென்ட் அவர்களிடம் சமர்ப்பித்தார்கி.பி. 405ல் போப்பாண்டவர் முதலாம் இன்னோசன்ட் (Pope Innocent I) வேதாகமத்தில் 73 புத்தகங்கள் பற்றி டூலோஸ் பிஷப்புக்கு (Bishop of Toulouse) விரிவாக எழுதுகிறார்வேதாகமத்தில் 73 புத்தகத்தைப் பற்றி கார்த்தேஜ்  சங்கம் எடுத்த தீர்மானத்தை மீண்டும் போப்பாண்டவர் போனிப்பாஸ் (Pope Boniface) கி.பி. 419ல் சம்மதிக்கிறார்

 பின்னர் கி.பி. 14 38-1449 வரை நடந்த பிளாரன்ஸ் சங்கத்தில் (Council of Florence) போப்பாண்டவர் யூஜின் IV (Pope Eugene IV) மற்றும் உரோமை அரசர் ஜான் VIII மற்றும் கான்ஸ்டான்டிநோபிள்  பிஷப் ஜோசப்  II, எபேசு (Ephesus City) நகர பிஷப் மார்க்நிசியே (Nicene) பிஷப் பசிலோஸ் பெசாரியன் (Basilios Bessarion) மாஸ்கோ மற்றும் கீவ் பிஷப்  இசிதோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இறுதியில் கார்த்தேஜ்  சங்கம் பரிசுத்த வேதாகமம் பற்றி முடிவு செய்த நூல்களில்பழைய ஏற்பாடு 46 புத்தகங்கள் என்றும் புதிய ஏற்பாடு 27 புத்தகங்கள் என்றும் பிளாரன்ஸ் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இவ்வாறு பல நூற்றாண்டுகளாக பரிசுத்த வேதாகமம் பற்றி புனித சங்கங்களால் (Ecumenical Councils of the Roman Catholic Church) தீர்மானிக்கப்பட்டுபயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பரிசுத்த வேதாகமம் அனைத்து கிறிஸ்தவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உபயோகத்தில் இருந்து வந்ததுஇந்த காலம் வரைஇயேசு ஆண்டவர் ஸ்தாபித்த சபையில்எந்த பிரிவினைகளும் இல்லை.

 


4.  மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து நீக்கம்:-

The Founder of the Lutheran Mission-Martin Luther was excommunicated from the Roman Catholic Church:- 

ஜெர்மனி தேசத்தில் Order of Saint Augustin (OSA) என்ற ரோமன் கத்தோலிக்க துறவற சபையின் பாதிரியாராக மாட்டின் லூத்தர் 1507ல் அபிஷேகம் செய்யப்பட்டார்இவர் ஒரு சிறந்த இறையியல் வல்லுநர்இவ்வுலகில் ஒருவன் செய்யும் பாவங்களுக்காக இங்கேயே பரிகாரம் செய்து பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கிட பாதிரிகளுக்கு அதிகாரம் உண்டு என்கிற ரோமன் கத்தோலிக்க கோட்பாட்டினை எதிர்த்து 95 கட்டுரைகளை 31-10-1517ல் வெளியிட்டார்இது சம்பந்தமாகரோமன் கத்தோலிக்கத்  திருச்சபையின் அதிகாரிகளால் மார்ட்டின் லூத்தரிடம் விளக்கம் கேட்கப்பட்டதுஆனால்மார்ட்டின் லூத்தர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்இதனால்மார்ட்டின் லூத்தர் 03-01-1521ம் நாள் போப்பாண்டவர் பத்தாம்  சிங்கராயர் (Pope Leo X) அவர்களால் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டார்.  இதனால்ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக மார்ட்டின் லூத்தர் பல இடங்களில் பேசி வந்தவுடன் 1525ல்  துறவறத்திலிருந்து வெளிவந்த கன்னியாஸ்திரியை திருமணம் செய்தார்1525 முதல் கத்தோலிக்க திருச்சபையிலுள்ள பல எதிர்ப்பாளர்கள்ஆங்கிலேய சீர்திருத்தவாதி  William Tyndale,  சுவிட்சர்லாந்து சீர்திருத்தவாதி Ulrich Zwingly ஆகியோர் கூட்டாக ஸ்பெயின் அரசன் ஐந்தாம் சார்லஸிடம் தங்கள் சீர்திருத்தங்களைப் பற்றி எடுத்துரைத்து பல முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக மித்ரன் மிஷன் ஆரம்பிக்கப்பட்டது.  நார்வேயிலும்ஸ்வீடனிலும் 1544ல்  லூத்தரன் மிஷன் அந்நாட்டு மதமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

 

5.   இங்கிலாந்து பேரரசர் எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையிலிருந்து நீக்கம்:- 

       The King Henry VIII of England and the 

     Founder of The Anglican Church was 

     excommunicated from The Roman Catholic 

     Church:-

 இந்நிலையில் இங்கிலாந்து தேசத்தில் எட்டாம் ஹென்றி 22-04-1509ம் நாள் அரசனாக பதவியேற்றார்இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல வழிகளில் கத்தோலிக்க திருச்சபைக்கு உதவி செய்தார்இதனால்போப் ஆண்டவர் பத்தாம் சிங்கராயர் (Pope Leo-X)

 கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசப் பாதுகாவலர் (Defender of Faith) என்னும் பட்டத்தைஇங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றிக்கு வழங்கி கௌரவித்தார்அரசர் எட்டாம் ஹென்றி காத்தரின் என்ற பெண்ணை திருமணம் செய்து 23 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்ஓர் ஆண் வாரிசு இல்லாமல் இருந்ததுஇதனால் எட்டாம் ஹென்றிஇரண்டாம் திருமணத்திற்காக போப் ஆண்டவரிடம் அனுமதி கேட்டார்இயேசு ஆண்டவரின் வார்த்தைப்படி (மத்19:3-9) ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அனுமதியில்லைஎனவேபோப் ஆண்டவர் கிளமெண்ட்-VII (Pope Clement-VII ) அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்இதை மீறி எட்டாம் ஹென்றி அன்னே போலின் (Anne Boleyn) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்பின்னர்பதவிக்கு வந்த போப்பாண்டவர் மூன்றாம் சின்னப்பர் (Pope Paul-III) அவர்களால்     17-12-1538ம் நாள் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றி நீக்கப்பட்டார்.                                                                                                

ஏற்கனவேஇங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றிரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக இங்கிலாந்தில் சட்டம் இயற்றி 1530ல் "Church of England" என்ற ஒரு சபையை ஆரம்பித்து இங்கிலாந்து நாட்டின் அரசாங்க மதமாக பிரகடனப்படுத்தி விட்டார். அரசன் ஆணைக்கு கீழ்ப்படியாத St. Thomas Moore போன்ற ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் பலர் கொல்லப்பட்டனர்.

 இவ்வாறுகத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக ஜெர்மனிபிரான்ஸ்இங்கிலாந்து போன்ற இடங்களில் பிரிவினை சபைகள் ஆரம்பிக்கப்பட்டு ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு விரோதமாக செயல்பட்டதுடன்இந்த தேசங்களில் பெரிய குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டது.

 

 

6.  பரிசுத்த வேதாகமத்தில் பிரிவினைவாதிகளின் அத்துமீறல்:-

    The Reformation Leaders removed the

    Seven Old Testament Books who had no 

    Legitimate Authority to do so:-

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சி செய்த மாட்டின் லூத்தர், டின்டேல், சுவிங்லி, அரசர் ஐந்தாம் சார்லஸ்இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி ஆகியோர் கூட்டாக சேர்ந்து கொண்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மற்றும் மூப்பர்களால் தொகுத்தளிக்கப்பட்ட பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாடு 46 புத்தகங்களிலிருந்து ஏழு புத்தகங்களை நீக்கிவிட்டு 39 புத்தகங்களின் தொகுப்பை மட்டுமே வெளியிட்டனர்.

மேலும் பிரிவினை சபையார் யாரும் தங்களை, பரிசுத்த வேதாகமத்தை நம்பும் சபையினர் என்று நேர்மையாக கூற முடியாது.  ஏனென்றால், பிரிவினை சபையினர்கள் பரிசுத்த வேதாகமத்தில் பெரும் பகுதிகளை கட்டுக்கதையானவைகள் என்று நிராகரித்துவிட்டனர். உதாரணமாக, *"ஞான ஆகமம்" (Wisdom) முழு பகுதியையும், தானியேல் ஆகமம் 13,  14 அதிகாரங்கள் மற்றும் மக்கபேயர் ஆகமம் (The Books of Machabees 1 and 2) முதல் மற்றும் இரண்டாம் புத்தகங்கள் ஆகும்.* 

இப்படி வேதாகமத்திலுள்ள பல பகுதிகளை நீக்கிவிடவும், மாற்றங்கள் செய்திடவும் இவர்கள் யார்? இவ்வாறு அந்த புத்தகங்களை நீக்கிவிட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

இயேசு ஆண்டவரால் உருவாக்கப்பட்டு, அதிகாரமளிக்கப்பட்டு, போப்பாண்டவரால் வழிநடத்தப்பட்டுவரும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து; நீக்கப்பட்ட சுயநலவாதிகளின், ஆணவத்தினாலும், அதிகார வெறியினாலும்; இயேசு ஆண்டவர் ஸ்தாபித்த திருச்சபையில், பிளவினை உண்டாக்கி, குழப்பம் விளைவித்து, கோடிக்கணக்கான மக்களை திசை திருப்பிய சுயநலவாதிகளை, சதிகாரர்களை, இயேசு ஆண்டவர் நிச்சயம் தண்டிப்பார்.

இவ்வாறு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், ஆண்டவரின் சபைக்கு எதிராக வஞ்சக செயலில் ஈடுபட்டு, பரிசுத்த வேதாகமத்தின் சில பகுதிகளை நீக்கிவிட்ட சதிகாரர்கள். அர்ச். சின்னப்பர் (St. Paul) சொல்கிறபடி, வேத நூலில் உள்ளதெல்லாம் கடவுளால் ஏவப்பட்டுள்ளது. போதிக்கவும், கண்டிக்கவும், சீர்திருத்தவும், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வில் மக்களைப் பயிற்றவும் பயன்படும்". (2 திமோத்தேயு.3:16) என்று தெளிவு படுத்தினார். மேலும், அர்ச். இராயப்பர் (St. Peter) எழுதியாவது, "ஆனால் மறை நூலில் உள்ள இறைவாக்கு எதுவும் அவனவன் தரும் விளக்கத்திற்கு உட்படக்கூடியதன்று என்பதை நீங்கள் முதன் முதலில் மனதில் வைக்க வேண்டும்." (2 Peter. 1:20). இவ்வாறு, வேத வசனங்கள் தெளிவுபடுத்திய பின்னரும், பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழு புத்தகங்களை நீக்கிவிட்டு அவரவர் விருப்பத்திற்கேற்ப,  பிரிவினைவாதிகளால் விளக்கம் தருவது வரம்பு மீறிய செயலே ஆகும் இதையே, அர்ச். இராயப்பரும் (St. Peter) உறுதிப்படுத்துகிறார்.  அதாவது, "நம் ஆண்டவரின் பொறுமையே நமக்கு மீட்பு என எண்ணுங்கள். நமது அன்புக்குரிய சகோதரர் சின்னப்பரும் (St. Paul) தமக்கு அளிக்கப்பட்ட ஞானத்தின்படி இவ்வாறு உங்களுக்கு எழுதியிருக்கிறார். தம் கடிதங்களில் இதைப் பற்றி பேசும்போதெல்லாம் அதையே அவர் சொல்கிறார். புரிந்து கொள்வதற்குக் கடினமானவை சில அவருடைய கடிதங்களில் உள்ளன. அறியாதவர்களும், உறுதியற்றவர்களும், மறைநூலில் மற்ற பகுதிகளுக்குப் பொருள் திரித்துக் கூறுவது போல, இவற்றிற்கும் கூறுகின்றனர். இதனால், தங்கள் மீதே அழிவை வருவித்து கொள்கின்றனர்." (2 Peter 3:15-16) என்று எச்சரித்துள்ளார். இவ்வாறு ஆண்டவர் இயேசு ஸ்தாபித்த திருச்சபைக்கு மேலே சொல்லப்பட்ட, *சுயநலம்கொண்ட சதிகாரர்களால் பெரிய சோதனைகளும்,  குழப்பங்களும் ஏற்படுத்தியதுடன் எண்ணிலடங்கா அப்பாவி மக்களை திசை திருப்பிய அக்கிரமத்தைச் செய்தனர்.*

 


7.  திருதெந்தீன் சங்கமும்வேதாகம நூல்கள் பற்றிய பிரகடனமும்:-

Decree concerning the Canonical Scriptures by the Trent Council:-

 *கி.பி.367ல்* புனித அத்தனேசியஸ்பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்கள் என்றும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் என்றும் போப்பாண்டவர்  முதலாம் டமாசுஸ் அவர்களிடம் ஒரு பட்டியலை சமர்ப்பித்தார். பின்னர்

 *கி.பி.393ல்* Synod of Hippo, 

 *கி.பி.397ல்* Third Council of Carthage,

 *கி.பி.405ல்* போப்பாண்டவர் முதலாம் இன்னோசென்ட் 46+27 பரிசுத்த வேதாகம புத்தகங்களைப் பற்றி டூலோஸ் பிஷப்புக்கு எழுதினார்.

 *கி.பி.419ல்* பரிசுத்த வேதாகம புத்தகங்கள் 46+27 என கார்த்தேஜ் சங்கம் எடுத்த முடிவை போப்பாண்டவர் பொனிப்பாஸ் உறுதி செய்தார்.

கி.பி.397ல் கார்த்தேஜ் சங்கம்  வேதாகமம் 46+27 என்று தீர்மானித்ததை *கி.பி.1449ல்* Council of Florence சங்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது

இவ்வாறு ரோமன் கத்தோலிக்க பரிசுத்த சங்கங்கள், வேதாகமம் 46+27 என்று தீர்மானித்த முடிவை மீறி; சுயநலம் கொண்ட-மார்ட்டின் லூத்தர் மற்றும் இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி ஆகியோர் பரிசுத்த வேதாகமத்தில் செய்த அக்கிரமத்தின் மீது, மறுபடியும் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்பட்டது

இதனால், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாச கோட்பாடுகள் பற்றியும், வேதாகமம் பற்றியும் ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிவிட்டது. *எனவே, போப் ஆண்டவர் மூன்றாம் சின்னப்பர் (Pope Paul-III) Trent-Italy என்ற இடத்தில் ஒரு மகா சபையை 13-12-1545ல் கூட்டினார். (Council of Trent 1545-1563-திருதெந்தீன் சங்கம்).* இந்த சங்கத்தில், கத்தோலிக்கத்  திருச்சபையின் அனைத்து விசுவாச கோட்பாடுகள் பற்றியும் அலசி ஆராயப்பட்டது. பரிசுத்த வேதாகமம் பற்றியும் அதில் எத்தனை புத்தகங்கள் உள்ளன என்றும் விவாதிக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் மிக மிக முக்கியம் வாய்ந்த சங்கமாக இன்றளவும் இருந்து வருகிறது.

 இந்த, திருதெந்தீன் சங்கம் (Council of Trent) முதலாவதாக, பரிசுத்த வேதாகமத்தைப் பற்றி ஆய்வு செய்தது. இந்த சங்கத்தின் நான்காவது அமர்வு பல நூற்றாண்டுகளாக உபயோகித்து வந்த அர்ச். இரோணிமூஸ் (St. Jerome) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, திருச்சபையின் மூப்பர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட Latin Vulgate Bible  (லத்தின் வுல்காத்தா பைபிள்ரோமன் கத்தோலிக்கர்களின் அதிகாரப்பூர்வமான வேதாகமம் என்றும், ரோமன் கத்தோலிக்கத்  திருச்சபையின் உபயோகங்களுக்கும் (பிரசங்கம், ஆய்வு) இதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், இதற்கு எதிராக யாரும் பேசக்கூடாது எனவும் *08-04-1546ல் திருதெந்தீன் சங்கத்தினால் பேராணை பிறப்பிக்கப்பட்டது.* (The Sacred Council of Trent decreed that “the old Latin Vulgate Edition, which, in use for so many years, has been approved by the Church, be in public lectures, disputations, sermons and expositions held as authentic, and so no one dare or presume under any pretext whatsoever reject it”  (Fourth Session, April 8, 1546).

 *மேலும், அந்த பேராணையில், பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்கள் எனவும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.* 

அந்தப் பேராணை பின்வருமாறு:-

 திருதெந்தீன் சங்கத்தின் நான்காவது அமர்வு MDXLVI ஆண்டு ஏப்ரல் மாதத்தின் எட்டாவது நாளது தீர்மானம். (08-04-1546).

 *வேதாகம நூல்களைப் பற்றிய பேராணை:* 

பரிசுத்த ஆவியில் கூடியிருக்கிற திருதெந்தீன் சங்கத்தின் புனிதமான மற்றும் பரிசுத்த எக்குமெனிக்கல்  சங்கத்தின் பொது அமர்வில், அதே மூன்று அப்போஸ்தலிக்க பிரதிநிதிகள் தலைமை தாங்கி, திருச்சபையில் சுவிசேஷத்தின் தூய்மை பாதுகாக்கப்படுதல்தவறுகள் அகற்றப்படுதல்ஆகியவற்றை எப்போதும் தங்கள் பார்வையில் வைத்திருந்து; இந்த சுவிசேஷமானது, முன்பு பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டுதேவ சுதனாகிய நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாதர், முதலில் தம்முடைய சொந்த வாயினால் அறிவித்தார்பின்னர் எல்லா உயிரினங்களுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களால் பிரசிங்கிக்கப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அனைத்திற்கும் ஊற்றாக இருக்கும் இரட்சணியத்தின் சத்தியம், ஒழுக்க நியதி ஆகிய இரண்டும்; இந்த சத்தியமும் ஒழுக்கமும் எழுதப்பட்ட புத்தகங்களில் இருப்பதையும் எழுதப்படாத மரபுகள் கிறிஸ்துவின் வாயினாலோ அல்லது அப்போஸ்தலர்களிடமிருந்தோ  பரிசுத்த ஆவியானவர் கட்டளையிடும் நமக்கும், கையிலிருந்து கைக்கு அனுப்பப்பட்டது போல் வந்துள்ளதை தெளிவாகக் கண்டுணர்ந்து; (இந்த ஆயர் அமர்வானது) பாரம்பரிய மரபுவழி பிதாக்களின் உதாரணங்களைப் பின்பற்றி, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களையும் சமமான பக்தியுடனும், மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறது. மற்றும் வணங்குகிறது-இரண்டிற்கும் ஒரே கடவுள் தான் ஆசிரியர் என்பதை கண்டுள்ளது. மேலும், கூறப்பட்ட பாரம்பரியங்கள், அத்துடன் கிறிஸ்துவின் சொந்த வாய்மொழியாலோ அல்லது பரிசுத்த ஆவியின் மூலமோ கட்டளையிடப்பட்டு விசுவாசத்துடனும், நல்லொழுக்கத்துடனும் தொடர்புடையவை என கத்தோலிக்கத் திருச்சபையில் தொடர்வரிசையாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. மேலும், இந்த புனித சங்கத்தின் இந்த அமர்வினால் பெறப்பட்ட புத்தகங்கள் யாவை என்ற சந்தேகம் எவருக்கும் ஏற்படாத வகையில், இந்த தீர்ப்பாணையில், பரிசுத்த வேதாகம நூல்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்று இந்த புனித சங்கம் கருத்தியதால், அவைகளைப் பற்றிய  பட்டியலை இத்துடன் இணைத்து காட்டப்பட்டுள்ளது.

 *பழைய பழைய ஏற்பாட்டின் நூல்களாக;* 

 மோயீசனின் ஐந்து புத்தகங்கள்ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகவும், எண்ணாகமம், உபாகமம்;

ஜோஸுவா, நீதிபதிகள், ரூத்,

அரசர்களின் நான்கு புத்தகங்கள்,

பாராலிபோமினனின் அதாவது நாளாகமத்தில் இரண்டு

எஸ்திராஸின் அதாவது எஸ்ரா ஆகமம் முதல் புத்தகம், நெகேமியாஸ் ஆகமத்தின் இரண்டாம் புத்தகம்,

தோபியாஸ், யூதித், எஸ்தர், யோபு

நூற்றைம்பது சங்கீதங்களைக் கொண்ட தாவீதின் சங்கீதாகமம்,

பழமொழிகள், சங்கத் திருவுரை ஆகமம்

உன்னத சங்கீதங்கள்

ஞானாகமம், சீராக் ஆகமம்இசையாஸ், எரேமியாஸ், புலம்பல், பாரூக்,

எசேக்கியேல், தானியேல்,

பன்னிரண்டு சிறு தீர்க்கதரிசிகளின் ஆகமங்கள், அதாவது ஓசே, யோவேல், ஆமோஸ், அப்தியாஸ், யோனாஸ், மிக்கேயாஸ், நாகும், அபாக்கூக், செப்போனியாஸ், ஆகாய், சக்கரியாஸ், மலாக்கியாஸ்;

மக்கபேயர்களின் இரண்டு புத்தகங்கள், முதல் மற்றும் இரண்டாவது. 

 *புதிய ஏற்பாட்டின் நூல்களாக:* 

நான்கு சுவிசேஷங்கள்-மத்தேயு, மாற்கு, லூக்காஸ் மற்றும் அருளப்பர்;

லூக்காஸ் சுவிசேஷகர் எழுதிய அப்போஸ்தலர்களின் நடபடிகள்,

அப்போஸ்தலர் சின்னப்பரின் பதிநான்கு நிரூபங்கள்- உரோமர்களுக்கு (ஒன்று) கொரிந்தியர்களுக்கு (இரண்டு)

கலாத்தியர்களுக்கு (ஒன்று)

எபேசியர்களுக்கு (ஒன்று)

பிலிப்பியர்களுக்கு (ஒன்று)

கொலோசியர்களுக்கு (இரண்டு)

தெசலோனிக்கேயருக்கு (இரண்டு)

திமோத்தேயுவுக்கு (ஒன்று)

தீத்துஸுக்கு (ஒன்று)

பிலமோனுக்கு (ஒன்று)

எபிரேயருக்கு (ஒன்று)

அப்போஸ்தலர் இராயப்பர் (இரண்டு)

அப்போஸ்தலர் அருளப்பர் (மூன்று) அப்போஸ்தலர் யாகப்பர் (ஒன்று)

அப்போஸ்தலர் யூதா (ஒன்று) மற்றும்

அப்போஸ்தலர் அருளப்பரின் காட்சியாகமம் (The Revelation)

ஆனால், கத்தோலிக்கத் திருச்சபையில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் பழைய லத்தின் வுல்காத்தா பதிப்பில் உள்ள வார்த்தைகளை யாரேனும் ஒருவர், புனிதமான மற்றும் நியதிக்குட்பட்ட புத்தகங்களையோ அல்லது அவற்றின் அனைத்து பகுதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலோ அல்லது தெரிந்தோ அல்லது வேண்டுமென்றோ *மேற்கூறிய பாரம்பரிய மரபுகளை நிந்தித்தால்; அவர்கள் சபிக்கப்படக் கடவார்கள்.* ஆகவே, விசுவாச அறிக்கையின் அடித்தளத்தை அமைத்த பிறகு, சொல்லப்பட்ட அமர்வு எந்த வரிசையில், எந்த முறையில் தொடரும் என்பதையும், கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதிலும், திருச்சபையின் ஒழுக்க நியதிகளை மறுசீரமைப்பதிலும் அது முக்கியமாகப் பயன்படுத்தும் விசுவாச கோட்பாடுகளையும், சாட்சியங்களையும், அதிகாரங்களையும் அனைவரும் புரிந்து கொண்டு அதன்படி வாழ வேண்டும்.

The same in English as follows:

Session the Fourth celebrated on the eighth day of the month of April, in the year MDXLVI (1546).

DECREE CONCERNING THE CANONICAL SCRIPTURES

         The sacred and holy, ecumenical, and general Synod of Trent – lawfully assembled in the Holy Ghost, the same three legates of the Apostolic See presiding therein – keeping this always in view, that, errors being removed, the purity itself of the Gospel be preserved in the Church; which (Gospel), before promised through the prophets in the holy Scriptures, our Lord Jesus Christ, the Son of God, first promulgated with His own mouth, and then commanded to be preached by His Apostles to every creature, as the fountain of all, both saving truth, and moral discipline; and seeing clearly that this truth and discipline are contained in the written books, and the unwritten traditions which, received by the Apostles from the mouth of Christ himself, or from the Apostles themselves, the Holy Ghost dictating, have come down even unto us, transmitted as it were from hand to hand; (the Synod) following the examples of the orthodox Fathers, receives and venerates with an equal affection of piety, and reverence, all the books both of the Old and of the New Testament – seeing that one God is the author of both – as also the said traditions, as well those appertaining to faith as to morals, as having been dictated, either by Christ’s own word of mouth, or by the Holy Ghost, and preserved in the Catholic Church by a continuous succession.  And it has thought it meet that a list of the sacred books be inserted in this decree, lest a doubt may arise in any one’s mind, which are the books that are received by this Synod.   They are as set down here below: of the Old Testament:

The five books of Moses, to wit, genesis, Exodus, Leviticus, Numbers, Deuteronomy;

Joshua, Judges, Ruth,

four books of Kings,

two of Paralipomenon,

the first book of Esdras and the second which is entitled Nehemiah;

Tobias, Judith, Esther, Job

the Davidical Psalter, consisting of a hundred and fifty psalms;

the Proverbs, Ecclesiastes,

the Canticle of Canticles,

Wisdom, Ecclesiasticus, Isaias, Jeremias, Lamentations with Baruch;

Ezechiel, Daniel;

the twelve minor prophets, to with, Osee, Joel, Amos, Abdias, Jonas, Micheas, Nahum, Habacuc, Sophonias, Aggaeus, Zacharias, Malachias

two books of the Machabees, the first and the second.            Of the New Testament:

the four Gospels, according to Matthew, Mark, Luke and John;

the Acts of the Apostles written by Luke the Evangelist;

Fourteen epistles of Paul the apostle, (One) to the Romans, two to the Corinthians, (One) to the Galatians, to the Ephesians, to the Philippians, to the Colossians, two to the Thessalonians, two to Timothy, (One) to Titus, to Philemon, to the Hebrews;

two of Peter the Apostle,

three of John the Apostle,

one of the Apostle James,

one of Jude the Apostle, and

the Apocalypse of John the Apostle.  

But if anyone receive not, as sacred and canonical, the said books entire with all their parts, as they have been used to be read in the Catholic Church, and as they are contained in the old Latin Vulgate edition; and knowingly and deliberately contemn the traditions aforesaid; let him be anathema.  Let all, therefore, understand, in what order, and in what manner, the said Synod, after having laid the foundation of the Confession of faith, will proceed, and what testimonies and authorities it will mainly use in confirming dogmas, and in restoring morals in the Church.

பின்னர் *30-09-1943ல் போப்பாண்டவர் 12ம் பத்தி நாதர் (Pope Pius-XII) Divine Aflante Spiritu* என்னும் உத்தரவின் (Encyclical) 12ம் பத்தியில் (the Latin Vulgate Bible is free from any error whatsoever in matters of faith and morals) *இந்த லத்தீன் வுல்காத்தா வேதாகமம், விசுவாசம் மற்றும் ஒழுக்க கோட்பாடுகளும் கொண்ட மாசற்ற ஒன்றாகும் என்று அறுதியிட்டு சான்றளித்தார்.*

 


8.  வேதாகம ஏட்டுச் சுருள்கள் கண்டுபிடிப்பு:-

The Dead Sea Scrolls have been found:-

இந்நிலையில்ஜெருசலம் நகரின் கிழக்குப் பகுதியில் சாவுக்கடலின் (Dead Sea) வடமேற்கில் கடல் பகுதியிலிருந்து 1200 மீட்டர் உயரத்திலுள்ள மலைப்பகுதியில் கும்ரான் (Qumran) என்ற குகையில் காணப்பட்ட பகுதியில் (சவுல் அரசனுக்கு பயந்து தாவீது அரசர் ஒளிந்து கொண்ட பகுதி (1சாமுவேல்.24:4-8)அது மட்டுமல்ல,  இயேசு ஆண்டவரை மலை உச்சியில் நிறுத்தி சாத்தான் சோதனை செய்த பகுதி (மத்.4:8) இந்த குகைப் பகுதியேயாகும்). 1946ம் ஆண்டு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய 'ஜுமாஎன்ற சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்அப்போது சில ஆடுகள் காணாமல் போய்விட்டதுஎனவேமாலைப் பொழுதில்அந்த கும்ரான் குகைப் பகுதியில் ஆடுகளை தேடிப் பார்த்தான்ஆடுகளைக் காணவில்லைபின்னர்,  குகைக்குள்ளே அவன் போக பயப்பட்டு கல்லால் எறிந்து பார்த்தான்அப்போதுபானையில் கல்பட்டு ஒலி சத்தம் கேட்டதுஅன்று மாலைப்பொழுது என்பதால் வீட்டிற்கு வந்து விட்டான்மறுநாள்ஏதேனும் புதையல் இருக்கக்கூடும் என எண்ணி அவன் நண்பர் முகமது எட்-டிப் என்பவனைக் கூட்டிப் போய் அந்த குகையினுள் பார்த்தபோது சில மண் ஜாடிகளைக் கண்டனர்எனவேஅவைகளை எடுத்து வந்து வீட்டில் பார்த்தபோது புதையல் ஏதுமில்லைமாறாகஎழுத்துச்சுருள்கள் காணப்பட்டனபின்னர் அதை பழைய பொருள் வாங்குபவர்களிடம் விற்பனை செய்தான்.

 அந்த ஏட்டுச்சுருள்களை வாங்கிய நபர் அதில் ஏதோ இருப்பதை உணர்ந்தார்பின்னர் சிலர் அதைக் கேள்விப்பட்டு மீண்டும் கும்ரான் குகையில் தேடிய போது இன்னும் சில ஜாடிகள் கிடைத்தன1947 முதல் 1956 வரை கும்ரான் குகை பகுதியில் தேடப்பட்டுபல ஏட்டுச் சுருள்கள் கிடைத்தனஅந்த ஏட்டுச் சுருள்கள் எபிரேயம்அரமெய்க் மற்றும் கிரேக்கம் மொழிகளில் எழுதப்பட்டிருந்ததுபின்னர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவைகளை ஆராய்ச்சி செய்த போது 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை என்று உறுதிசெய்தனர்வேதாகமத்தின் நெகேமியா & எஸ்தர் ஆகிய இரண்டு புத்தகங்கள் தவிர அனைத்து புத்தகங்களின் நகல்கள் கிடைக்கப்பெற்றன.

 இதனால்லத்தீன் வுல்காத்தா என்கிற வேதாகம புத்தகங்களை (Latin Vulgate) ஆய்வு செய்து  கிடைக்கப்பெற்ற கும்ரான் ஏட்டுச் சுருள்களோடு ஒப்பிட்டுச் சரி பார்க்க வேண்டிய நிலைக்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு அவசியம் ஏற்பட்டது.

 


9.  வேதாகம நூல்கள் பற்றிய மறு ஆய்வு:-

    Review made on all Biblical Books:-

 இதுவரை வழக்கத்திலிருந்த பரிசுத்த வேதாகமத்தினை (Latin Vulgate Bible), கும்ரானில் கிடைக்கப்பெற்ற  ஏட்டுச்சுருள்களோடு

ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டிய அவசியம் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்பட்டது. எனவே, 29-11-1965ம் தேதி போப்பாண்டவர் ஆறாம் சின்னப்பர் (Pope Paul-VI) கார்டினல் அகஸ்டின் பெயா (Augustin Bea) தலைமையில் ஒரு குழு அமைத்து, வுல்காத்தா (Latin Vulgate) பரிசுத்த வேதாகமத்தை சீராய்ந்திட பணித்தார். அதைத் தொடர்ந்து, கார்டினல் அகஸ்டின் பெயா-தலைமையின் கீழான குழு, பரிசுத்த வேதாகமத்தை கும்ரானில் கிடைக்கப்பெற்ற ஏட்டுச்சுருள்களோடு 

 ஒப்பிட்டு சீராய்ந்து 1976ம் ஆண்டு போப்பாண்டவர் ஆறாம் சின்னப்பரிடம் *(Pope Paul-VI)* சமர்ப்பித்தது

இதனால், புதிய வேதாகமம் வெளியிட வேண்டிய கட்டாயம் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்பட்டது. இதன் பயனாக 25-04-1979ல் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் *(Pope John Paul-II) Constitutio Apostolica, qua, Nova Vulgata Bibliorum Sacrorum Editio-Typica-Declaratur Et Promulgatur* என்கிற புது வுல்காத்தா (New Vulgate) என்னும் பைபிளை வெளியிட்டு, எல்லா பைபிள் மொழிபெயர்ப்புகளும் இந்த புது வுல்காத்தா பைபிளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும் *(All vernacular translations should be judged by this New Vulgate- ut ad eam versions vulgaris referantur)* என்ற ஒரு பேராணையைப் பிறப்பித்தார். அந்தப் பேராணையில், போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால்,  "இறுதியாக இது எமது சாசனம். இந்த பேராணை எப்போதும் எல்லா இடங்களிலும் எல்லோரிடமும் செல்லத்தக்கது. இதை சம்பந்தப்பட்ட அனைவரும் நுணுக்கமாகவும் கவனமுடனும் கடைப்பிடிக்க வேண்டும். இதை எதுவும் தடை செய்ய முடியாது". (“Finally, it is our Will that this constitution of ours be always valid and effective, and observed scrupulously by all concerned, nothing contrary having any force whatsoever”) என உத்தரவிட்டார்.

 பரிசுத்த வேதாகம வரலாறு இவ்வாறு காணக்கிடக்கிறது. அர்ச். சின்னப்பர் (St. Paul) கூறுவதை மனதில் கொண்டு இது எனது கடமை என்பதால் இதை எழுதுகிறேன். அதாவது, "தேவ வார்த்தையை அறிவிக்கும் வாய்ப்பு இருந்தாலும், இல்லாவிடினும், வலியுறுத்திப் பேசும், கண்டித்துப் பேசும், கடிந்து கொள்ளும், அறிவுரை கூறும், மிகுந்த பொறுமையோடு போதித்து கொண்டேயிரும். ஒரு காலம் வரும் அப்போது நலமிக்க போதனையைத் தாங்க மாட்டார்கள். மாறாக செவித்தினவு கொண்டவர்களாய் தங்கள் மனம் போன போக்கிலே எண்ணிறந்த போதகர்களை திரட்டிக் கொள்வர். உண்மைக்குச் செவி கொடுக்க மறுத்து கட்டுக்கதைகளுக்குத்தான் செவி சாய்ப்பர். நீரோ எந்த சூழ்நிலையிலும் சமநிலையாயிரும். துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் நற்செய்தித் தொண்டனுக்குரிய வேலையைச் செய்யும் உம் திருப்பணியைச்செவ்வனே செய்யும். (2 திமோத்தேயு.4:1-5) என்கிற தேவ வார்த்தைக்கு ஏற்ப இதை எழுதுகிறேன்.

10. கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரம்:-

    The Authority of the Catholic Church

இயேசு ஆண்டவரின் வார்த்தைக்கு ஏற்ப செயல்பட்டு அவரது கொள்கைகளை செயல்படுத்தி வருவது ரோமன் கத்தோலிக்க திருச்சபையை ஆகும்மேலும்இறுதியாகஆண்டவர் இயேசு தனது சீடர்களிடம் (சீடர்கள் காலத்துக்குப் பின்பு புனித இராயப்பரின்            (St. Peter) வாரிசுகளான போப்பாண்டவர் மற்றும் அவரின் கீழ் இயங்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை"மண்ணுலகில் நீங்கள் எதெல்லாம் கட்டுவீர்களோஅதெல்லாம் பரலோகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்மண்ணுலகில் நீங்கள் எதெல்லாம் அவிழ்ப்பீர்களோ அதெல்லாம் பரலோகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்."(மத்.18:18) என்ற இயேசு ஆண்டவரின் வார்த்தைக்கு ஏற்ப செயல்பட்டு அவரது வார்த்தையை செயல்படுத்தி வருவது ரோமன் கத்தோலிக்க திருச்சபையை ஆகும்மேலும்

1.   பரிசுத்த வேதாகம மூல ஏட்டுச்சுருள்களைத் தேடிக்  கண்டுபிடித்தது:

 போப் ஆண்டவரின் கீழ் செயல்பட்ட ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே.

2.   பரிசுத்த வேதாகம மூல ஏட்டுச் சுருள்களை மொழி பெயர்த்தது:

போப் ஆண்டவரின் கீழ் செயல்பட்ட ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே.

3.   பரிசுத்த வேதாகமம்-பழைய ஏற்பாட்டில் மொத்தம் 46 புத்தகங்கள் என முடிவு செய்தது:

போப் ஆண்டவரின் கீழ் செயல்பட்ட ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் புனித சங்கங்களே.

4.  பரிசுத்த வேதாகமம்- புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 புத்தகங்கள் என முடிவு செய்தது:

போப் ஆண்டவரின் கீழ் செயல்பட்ட ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் புனித சங்கங்களே.

5.   பரிசுத்த வேதாகமத்துக்கு அங்கீகாரம் வழங்கியது:

போப் ஆண்டவரின் கீழ் செயல்பட்ட ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் புனித சங்கங்களே.

 உண்மை இப்படியிருக்க;

 கி.பி67லிருந்து கி.பி380 வரை இயேசு ஆண்டவரின்