பரிசுத்த வேதாகமம் – வரலாறும், சதிகாரர்களும்
பரிசுத்த வேதாகமம் - வரலாறும் , சதிகாரர்களும் By M.S.G.ALEX BENZIGER, ATTORNEY 1. இயேசு ஆண்டவர் ஸ்தாபித்த திருச்சபை :- Our Lord Jesus Christ Established the Catholic Church:- ஆண்டவராகிய இயேசு இவ்வுலகில் வாழ்ந்த பொழுது தனது 12 சீடர்களில் ஒருவரான அர்ச் . இராயப்பரிடம் (St.Peter) " நீ ஒரு பாறை இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் " (. மத்தேயு .16:18-19) என்றார் . இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் , மற்ற 11 அப்போஸ்தலர்களிடமும் மேற்கண்ட வார்த்தையைச் சொல்லவில்லை . மாறாக , அர்ச் . இராயப்பரிடம் (St.Peter) மட்டுமே சொன்னார் . ஆக , ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து , தனது 12 அப்போஸ்தலர்களில் , அர்ச் . இராயப்பரை மட்டுமே " தனது சபைக்கு " தலைவராக ஏற்படுத்தினார் . மேலும் , அர்ச் . இராயப்பரிடம் (St.Peter)" என் ஆடுகளை மேய் " (John.21:15-16) என்றும் , " என் ஆடுகளை கண்காணி " ( John. 21:17)