திருவிவிலியம் ஒரு போலி பைபிள்

திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.   
         பாகம் -1 முதல்  பாகம் -15 

திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                        பாகம் : 1 
கத்தோலிக்கரின் பரிசுத்த வேதாகம வரலாறு : 
Old Testament எபிரேய மொழியிலும், New Testament கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. இந்த  பைபிளில் உள்ள புத்தகங்கள் எவையென்று போப் டமாசுஸ் நிர்மாணித்து,  கி.பி.382-ல்  அர்ச். இரோணிமூஸிடம் (St.Jerome) பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலிருந்து லத்தீன் மொழியிலும்  புதிய ஏற்பாடு கிரேக்க  மொழியிலிருந்து லத்தீன் மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்திட பணித்தார். ஏனென்றால், எல்லோரும் எபிரேயம் மற்றும் கிரேக்கம் மொழியை படித்தறிவது இயலாத காரியம் என்பதால், லத்தீன் என்கிற ஒரே மொழியை எல்லோரும் பயன்படுத்தி புரிந்து கொள்ள முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்தார். இதையொட்டி அர்ச். இரோணிமூஸ் புதிய வேதாகமத்தை லத்தீனில் மொழி பெயர்த்து முடித்தார். பின்னர், பெரும்பாலான ஆசிரமங்களில் லத்தீனில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிளை, நகல்கள் (copying) எடுப்பதில் முழு வேலையாக ஈடுபட்டிருந்தனர். பின்னர் லத்தீன் மொழியில் பரிசுத்த வேதாகமம் பயன்பாட்டுக்கு வந்து பல நூறாண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. 
 பின்னர்,  கத். திருச்சபையின் மிக முக்கியமான திருதெந்தீன் சங்கத்தின்  நான்காவது அமர்வு 8-4-1546ல் வுல்காத்தா என்னும் இந்த பைபிள்  கத்தோலிக்கரின் அதிகாரபூர்வ பைபிளாக அறிவிக்கப்பட்டது. அதாவது, The Sacred Council of Trent decreed that➡ "the old Latin Vulgate Edition, which, in use for so many hundred years, has been approved by the Church, be in public lectures, disputations, sermons and expositions held as authentic, and so no one dare or presume under any pretext whatsoever reject it"⬅ (Fourth Session, April 8, 1546).  
அந்த பேராணையில் பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் என வரையறுத்து சொல்லப் பட்டது. மேலும் இதற்கு மாறாக பேசுபவர்கள் மீது பழியும் சுமத்தப்பட்டது. 
அந்த பேராணை பின்வருமாறு: 
SESSION THE FOURTH Celebrated on the eighth day of the month of April, in the year MDXLVI. (1546)
DECREE CONCERNING THE CANONICAL SCRIPTURES
The sacred and holy, ecumenical, and general Synod of Trent,--lawfully assembled in the Holy Ghost, the Same three legates of the Apostolic Sec presiding therein,--keeping this always in view, that, errors being removed, the purity itself of the Gospel be preserved in the Church; which (Gospel), before promised through the prophets in the holy Scriptures, our Lord Jesus Christ, the Son of God, first promulgated with His own mouth, and then commanded to be preached by His Apostles to every creature, as the fountain of all, both saving truth, and moral discipline; and seeing clearly that this truth and discipline are contained in the written books, and the unwritten traditions which, received by the Apostles from the mouth of Christ himself, or from the Apostles themselves, the Holy Ghost dictating, have come down even unto us, transmitted as it were from hand to hand; (the Synod) following the examples of the orthodox Fathers, receives and venerates with an equal affection of piety, and reverence, all the books both of the Old and of the New Testament--seeing that one God is the author of both --as also the said traditions, as well those appertaining to faith as to morals, as having been dictated, either by Christ's own word of mouth, or by the Holy Ghost, and preserved in the Catholic Church by a continuous succession. And it has thought it meet that a list of the sacred books be inserted in this decree, lest a doubt may arise in any one's mind, which are the books that are received by this Synod. They are as set down here below: of the Old Testament:
the five books of Moses, to wit, Genesis, Exodus, Leviticus, Numbers, Deuteronomy; 
Josue, Judges, Ruth, 
four books of Kings, 
two of Paralipomenon, 
the first book of Esdras, and the second which is entitled Nehemias; 
Tobias, Judith, Esther, Job, 
the Davidical Psalter, consisting of a hundred and fifty psalms; 
the Proverbs, Ecclesiastes, 
the Canticle of Canticles, 
Wisdom, Ecclesiasticus, Isaias, Jeremias, with Baruch; 
Ezechiel, Daniel; 
the twelve minor prophets, to wit, Osee, Joel, Amos, Abdias, Jonas, Micheas, Nahum, Habacuc, Sophonias, Aggaeus, Zacharias, Malachias; 
two books of the Machabees, the first and the second. 
Of the New Testament: 
the four Gospels, according to Matthew, Mark, Luke, and John; 
the Acts of the Apostles written by Luke the Evangelist; 
fourteen epistles of Paul the apostle, (one) to the Romans, two to the Corinthians, (one) to the Galatians, to the Ephesians, to the Philippians, to the Colossians, two to the Thessalonians, two to Timothy, (one) to Titus, to Philemon, to the Hebrews; 
two of Peter the apostle, 
three of John the apostle, 
one of the apostle James, 
one of Jude the apostle,and 
the Apocalypse of John the apostle.
But if any one receive not, as sacred and canonical, the  said books entire with all their parts,  as they have been used to be read in the Catholic Church,  and as they are contained in the old Latin Vulgate edition;  and knowingly and deliberately contemn the traditions aforesaid; let him be  anathema. Let all, therefore, understand, in what order, and in what manner, the said Synod, after having laid the foundation of the Confession of faith, will proceed, and what testimonies and authorities it will mainly use in confirming dogmas, and in restoring morals in the Church. இந்த புனித சங்கத்தின் உத்தரவுபடி வுல்காத்தா பைபிள் மட்டுமே திவ்விய பலி பூசையில் பயன்படுத்தப்பட வேண்டும்.  
 பின்னர் 1943-ல் போப் 12 ம் பத்திநாதர் (Pope Pius XII) Divino Aftlante Spiritu என்னும் Encyclical மூலம் "the Vulgate is free from any error whatsoever  in matters of faith and morals"  என உறுதிபடுத்தினார். ஆக Vulgate எனப்படும் வுல்காத்தா பைபிள் கத். திருச்சபையின் அதிகார பூர்வமான பைபிள் ஆகும். 
 29-11-1965 - ம் தேதி பாப்பரசர்  ஆறாம் சின்னப்பர், கார்டினல் அகஸ்டின் பெயா தலைமையில் ஒரு குழு அமைத்து வுல்காத்தா (Vulgate) பைபிளை சீராயப்பட்டது. பின்னர், 25-04-1979-ல் பாப்பரசர் இரண்டாம் ஜான் பால், புது வுல்காத்தா (New Valgate) என்னும் பைபிளை வெளியிட்டு, விவிலிய எல்லா மொழி பெயர்ப்புக்களும் இந்த புது வுல்காத்தா பைபிளுடன் ஒப்பிட்டு  சரிபார்க்கப்பட வேண்டும் என "Nova Vulgata-Scripturarum Thesaurus" என்னும் பேராணையில் ("ut ad eam versiones vulgarus referantur") all vernacular translations should be judged by this New Vulgate என்னும் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், இந்த ஷரத்துப்படி திருவிவிலியம் Scripturarum Thesaurus என்னும் புது வுல்காத்தாவுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படவில்லை. 
மேலும், Nova Vulgata-Scripturarum thesaurus  பேராணையின் கடைசி பாராவிற்கு முந்தைய பாரா தெரிவிப்பதாவது: 
Such being the case, we by virtue of this document declare and promulgate the New Vulgate edition of the Holy Bible as the 'Standard' one to be used especially in Liturgy, and also, as we have said, suited to other purposes". அதாவது, ... இந்த ஆவணத்தின் வழியாக இந்த புது வுல்காத்தா பைபிளின் பதிப்பை மாதிரி பதிப்பாக , முக்கியமாக திரு வழிபாட்டில் பயன்படுத்த வேண்டிய அதே சமயத்தில் மேலே கூறியுள்ள படி ஏனையவற்றுக்கும் பொருத்தமான பதிப்பாக, அறிக்கையிட்டு  பிரகடனம் பண்ணுகிறோம். 
மேலும், Nova Vulgata-Scripturarum thesaurus  பேராணையின் கடைசி பாரா தெரிவிப்பதாவது: Finally it is our Will that this Constitution of Ours be always valid and effective, and observed scrupulously by all concerned, nothing contrary having any force whatsoever." அதாவது, இறுதியாக இது எமது சாசனம், இந்த பேராணை எப்போதும், எல்லா இடங்களிலும், எல்லோரிடமும், செல்லத்தக்கது. இதை, சம்மந்தப்பட்ட அனைவரும் நுணுக்கமாகவும் கவனமுடனும் கடைப்பிடிக்க வேண்டும். இதை எதுவும் தடை செய்ய முடியாது " என்னும் ஓர் உத்தரவையும் பிறப்பித்தார்.
ஆனால், திருவிவிலிய முன்னுரையின் இரண்டாவது பாராவில், 
 "பழைய ஏற்பாடு எபிரேய பாடமான 'பிபிலியா எபிராயிக்கா' நூலையும், (Biblia Hebraica, Stuttgart Edition-Masoretic text) புதிய ஏற்பாடு விவிலிய சங்கங்களின் இணையத்தின் வெளியீடான கிரேக்க புதிய ஏற்பாட்டு நூலின் மூன்றாம் பதிப்பையும் (The Greek New Testament, UBS, third edition) சார்ந்து மொழி பெயர்க்கப்பட்டன". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக திருவிவிலியம், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான Nova Vulgata-Scripturarum Thesaurus என்னும் புது வுல்காத்தா பைபிளிலிருந்து மொழி பெயர்க்கப்படவில்லை என்பதால், திருவிவிவிலியம் கத்தோலிக்கர்களுக்கு அதிகாரபூர்வமான பைபிள் கிடையாது. திவ்விய பலி பூசையில் திருவிவிலியத்தை பயன்படுத்த அருகதையற்றது.
  
" திருச்சபைக்கு செவிசாய்க்காவிடில் புற இனத்தான் போலவும்  ஆயக்காரன் போலவும் இருக்கட்டும்". மத்.18:17.
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள்
................................................................................................................................................................

 2. திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                               பாகம் : 2    
திருவிவிலியம் வெளியிடப்படுவதற்கான கெட்ட எண்ணம்
திருவிவிலியம் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே,  பரிசுத்த வேதாகமத்தை திருத்தி எழுதிவிட  வேண்டும்  என்கிற கெட்ட எண்ணத்தை பொறுப்பான ஆயரும் அவரைச் சார்ந்த கூட்டமும் வெளியிட்டனர். 
அதாவது, கோட்டாறு மறை மாவட்டத்திலிருந்து வெளியிடப்படும் "தென் ஒலி" என்கிற பத்திரிகையில் அப்போதைய கோட்டாறு  மறை மாவட்ட  ஆயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி ( 1995-ல் திருவிவிலியத்திற்கு "அச்சிடலாம்" என அனுமதி  வழங்கியவர்) அவர்கள் ஆசியுடன்  1985 அக்டோபர் மாத தென் ஒலி பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியானது. 
அதாவது, 
"வளை கரங்களுக்கு விடுதலை வழங்க பைபிளின் பகுதிகளை மாற்றி  எழுதவா"? 
என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில்,  
 "மாதர் தம்மை  இழிவு செய்யும் மடமையைக்  கொளுத்துவோம்'  - என்ற வாக்கிற்கேற்ப விவிலியத்தில் பெண்ணடிமைத் தனத்தை நியாயப்படுத்தும் பகுதிகள் திரும்பத் திரும்ப  நம்மில் ஆண் முதன்மை  வர்க்க மனநிலையை உருவாக்கும் என்றால் வாருங்கள் அனைவரும் இணைந்து பைபிளின் பகுதிகளை மாற்றி எழுதுவோம்" ,  
என்று  அப்போதே முயற்சிகளை  மேற்கொண்டு, திட்டமிட்டு, பரிசுத்த வேதாகமத்தை  சீர்குலைத்து,  தப்பறைகள் கொண்ட திருவிவிலியத்தை  அறிமுகப்படுத்தி விட்டனர். 
தென் ஒலி பத்திரிகையின் 
Owner: Bishop M. Arockiasamy,  Bishop of Kottar, 
Editor : Fr. Maria Alphonse, 
Printer and Publisher: Rev. Fr. Andrew Selvaraj. 
ஆக கூட்டு முயற்சியால் பரிசுத்த வேதாகமத்தை சீர் குலைத்தனர்.
மேலும், தமிழக கத்தோலிக்க ஆயர்களால், பரிசுத்த வேதாகமம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் 1986 ல் தமிழ்நாடு திண்டிவனம் கத்தோலிக்க நடுநிலையம் (TNBCLC) ஒரு பரிசுத்த வேதாகமம் வெளியிட்டது. அதில் மதுரை பேராயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்கள் அந்த பரிசுத்த வேதாகமத்துக்கு  "மூல நூலுக்கு ஒத்திருக்கிறது" (அதாவது, Concordat cum originali-அதாவது, Agree with the original:) என சான்று அளித்திருந்தார். 

  திருவிவிலிய முன்னுரையின் இரண்டாவது பாராவில், 
 "பழைய ஏற்பாடு எபிரேய பாடமான 'பிபிலியா எபிராயிக்கா' நூலையும், (Biblia Hebraica, Stuttgart Edition-Masoretic text) புதிய ஏற்பாடு விவிலிய சங்கங்களின் இணையத்தின் வெளியீடான கிரேக்க புதிய ஏற்பாட்டு நூலின் மூன்றாம் பதிப்பையும் (The Greek New Testament, UBS, third edition) சார்ந்து மொழி பெயர்க்கப்பட்டன". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, திருவிவிலிய முன்னுரையின் படி ரோமன் கத்தோலிக்கர்களின் அதிகாரப்பூர்வமான புது வுல்காத்தா பைபிளிருந்து திருவிவிலியம் மொழிபெயர்க்கப் படாததால், 1995-ல் திருவிவிலியத்தை வெளியிடும் போது அதே பேராயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி "அச்சிடலாம்" (அதாவது Imprimatur-அதாவது,can be printed )  என சான்று அளித்தார்.  இங்கே கவனிக்க வேண்டியது, மூல நூலுக்கு ஒத்திருக்கிறது என்ற சான்றளிப்பை,  அச்சிடலாம்  என்று மாற்றி எழுதியது, திருவிவிலியம் சரியான மொழிபெயர்ப்பு இல்லை என்பதை அவரே சொல்லிவிட்டார். 

"போலித் தீர்க்கத்தரிசிகள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் ஆட்டுத் தோலைப்  போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகிறார்கள் ; உள்ளுக்கோ பறித்துச் செல்லும் ஓநாய்கள். அவர்கள் கனிகளைக் கொண்டே  அவர்களை அறிந்து கொள்வீர்கள்". மத். 7:15-16.
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள்

....................................................................................................................................................

3. திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                              பாகம் - 3
திருவிவிலியம் பற்றி கத்தோலிக்க விசுவாசிகளின் ஆதங்கமும் எதிர்ப்பும்:  
திருவிவிலியத்தில் ஆண்டவரின் இறைத்தன்மையை மறைத்தும், மாதாவுக்கு அவசங்கை ஏற்படுத்தியும், மூல நூலுக்கு ஒத்து போகாத ஒரு மொழிபெயர்ப்பை செய்து வெளியிட்டதனால், தமிழக கத்தோலிக்க குருக்கள் மத்தியிலும், விசுவாசிகள் மத்தியிலும் பெரிய குழப்பம் உருவாகி பெரிய எதிர்ப்பானது. 
குறிப்பாக, திருவிவிலியத்திலிருந்து இங்கே ஒரு உதாரணம் :  
ஆண்டவராகிய கடவுள் மனித அவதாரம் எடுத்ததை  விளக்கும் ஒரே ஒரு பகுதி இசையாஸ் 7:14 ஆகும் பரிசுத்த வேதாகமத்தில்,  "ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்.  இதோ கன்னிப் பெண்  கருத்தாங்கி  ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்". (இசை.7:14). என்பதாகும். ஆண் துணையின்றி  கன்னிப் பெண்  கருத்தரிப்பது இயற்கைக்கு எதிரானது. எனவே தான்  ஆண்டவரே ஒரு  அடையாளம் தருகிறார்.  அதுதான் இயற்கைக்கு மாறான அடையாளம், கன்னிப் பெண் ஆண் துணையின்றி கருத்தரிப்பது. That is why, a popularly known word is, "Gospel Truth". 
ஆனால்,  இந்த வாசகம், திருவிவிலியத்தில், "ஆதலால் ஆண்டவர் தாமே  உங்களுக்கோர் அடையாளம் தருவார்.  இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஒரு ஆண்மகவைப் பெற்றெடுப்பாள்". (ஏசாயா.7:14). என மாற்றி எழுதப்பட்டுள்ளது. இங்கே கவனிக்கவும், கன்னி என்கிற வார்த்தையை  இளம் பெண்  என்று மாற்றி எழுதியுள்ளனர்.  
இதனால் கத்தோலிக்க விசுவாசிகள், All India Laity Congress, கத்தோலிக்க விசுவாச பாதுகாப்பு இயக்கம் மற்றும் கத்தோலிக்கர் நல சங்கம் ஆகிய அமைப்புக்கள் சென்னை, திருச்சி, தூத்துக்குடி, பாளையங்கோட்டை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் மாநாடுகள் கூட்டி பேரெதிர்ப்பைக் காட்டினர்.  
பின்னர், சென்னையிலுள்ள கத்தோலிக்க விசுவாச பாதுகாப்பு இயக்கத்தால் பரிசுத்த வேதாகமத்துக்கும்  திருவிவிலியத்துக்கும் உள்ள குறைகளில் சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்டி ஒரு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. அதற்கு, சென்னை மயிலை மறை மாவட்டம் சார்பில் மறுப்பு என்ற பெயரில் ஒரு துண்டு பிரசுரம் எல்லா கோவில்களிலும் கொடுக்கப்பட்டது. அதற்கும் மறுப்பு தெரிவித்து, கத்தோலிக்க விசுவாச பாதுகாப்பு இயக்கம் மறுபடியும் ஒரு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது.  
இதனால்,  1996-ம் வருடம்,  சென்னைப் பேராயரால், " சென்னை, ரோசரி சர்ச் ரோட்டில்  அமைந்துள்ள Pastoral Center ரில் திருவிவிலிய விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. யாருக்கேனும்  திருவிவிலியத்தில் சந்தேகம் இருந்தால் வந்து தெரிந்து கொள்ளுங்கள் என்ற ஒரு  அறிவிப்பு வெளியிடப்பட்டது.  சுமார் 25 பேர்கள்  நாங்கள்  கலந்து கொண்டோம். திருவிவிலிய மொழிபெயர்ப்புக்குக்  காரணமான 6 குருக்கள்  வந்திருந்தனர். கூட்டம் பதினொன்றரை மணியளவில் ஆரம்பமானது. கூட்டத்தில், இந்த  இசையாஸ். 7:14 கன்னி  என்பது  சரியா  அல்லது  இளம்பெண் சரியா  என்ற வார்த்தைக்கு மட்டும் கிட்டத்தட்ட   ஒன்றரை மணி நேரம்  விவாதம் நடைபெற்றது. போயிருந்த  நாங்கள் எல்லோருமே  கன்னி  என்கிற வார்த்தையில்  உறுதியாக  நின்றோம்.  
பின்னர், ஒரு குருவானவர்  சொன்னார்,  மூல மொழியான  எபிரேயத்தில் almah என்ற  வார்த்தைதான் உள்ளது. almah என்றால்  'இளம் பெண்' என்று தான்  அர்த்தம் ஆகும்.  எபிரேய  மொழியில் betula என்றால் 'கன்னிப் பெண்' என்று  அர்த்தமாகும்.  மூல மொழியான எபிரேயத்தில்  almah என்று  காணப்பட்டதால்,  நாங்கள்  திருவிவிலியத்தில்  இளம் பெண்  என்று எழுதினோம் என்றார். 
இதைக் கேட்டவுடன்  நான்  (அலெக்ஸ் பென்சிகர்) எழுந்து,  இசையாஸ்.7:14-ல் முதல் வாக்கியம், "ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம்  தருவார்" என்று உள்ளதே, அப்படியானால்,  அது  என்ன அடையாளம் என்று கேட்டேன்.  அதற்கு  அந்த  குருவானவர் "ஆண் மகன்" என்று  சொன்னார். மறுபடியும்  நான்  உடனே  அவரிடம்  கேட்டேன்,  இளம்பெண்கள்  பலர்  முதல் குழந்தையாக ஆண் மகனைப் பெற்றெடுக்கிறார்களே, இதற்கும்,  அதற்கும் வித்தியாசம்  இல்லையே  என்று சொல்லி  இசையாஸ் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசினமான  ஆண்டவரின் அடையாளம் என்னவென்று  மறுபடியும் கேட்டேன். அ.வ்வளவு தான்,  பதிலே சொல்லாமல், கூட்டம்  இத்துடன்  முடிவு  பெற்றது என்று  சொல்லி  போய்விட்டார்கள். 
ஆக, இன்று வரை அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.   
அப்போது,  திருவிவிலிய  எதிர்ப்பை முன்னின்று நடத்திய மகான்கள் : புன்னைக்காயலைச்  சேர்ந்த தொழிலதிபரும் 1979-ல் போப்பாண்டவரிடமிருந்து Pro Eclessia et Pontifice என்னும் விருது பெற்றவருமான  டாக்டர்.  A.ராஜா பிஞ்ஞேயிரா, பாளையங்கோட்டை என்ஜினீயர்  திரு.ஆதிலிங்கம், தொண்டன் பத்திரிகை ஆசிரியர் திரு . V.P. சபரி, புனித பாதை ஆசிரியர் திரு.J.S. மைக்கேல்,  முன்னாள் மந்திரி திருமதி லூர்தம்மாள் சைமன், இறையியல் வல்லுநர் திரு.K. மரிய  பங்கிராஸ், பாளையங்கோட்டை திரு.ரொசாரியோ ராயன்(National Secretary, All India Laity Congress), திரு.சார்லஸ் பசாஞ்ஞா, வேம்பாரைச் சேர்ந்த  திரு.செல்வராஜ் கர்வாலோ, கத்தோலிக்க  விசுவாச பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.C.J. ரபேல், பொதுச் செயலாளர் திரு.J. விட்டாலிஸ் பர்னாண்டோ, வழக்கறிஞர் திரு. G. அலெக்ஸ் பென்சிகர்,  பாளையங்கோட்டை Telephone திரு.ஆரோக்கிய ராஜ், திரு.சுபாஷ் பெர்னாண்டோ(தூத்துக்குடி), திரு.சேவியர் ரெஜிஸ், திருச்சி இருதயராஜ், நாகர்கோவில் திரு.A.அமல்ராஜ் ஆசிரியர் மற்றும்  உறுதுணையாயிருந்த குருக்கள் Fr. மைக்கேல்.S.J. (குற்றாலம்)   Fr. P.K.ஜார்ஜ்.S.J. (திண்டுக்கல்), Fr. ஸ்தனிஸ்லாஸ் (நாகர்கோவில்), Fr. சேவியர் இக்னேசியஸ் (தூத்துக்குடி), Fr. பங்கிராஸ் ராஜா (தூத்துக்குடி), Fr.அல்போன்ஸ் (தூத்துக்குடி) ஆகியோர்களாவர். 

 ஆக இப்படிப்பட்டவர்கள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
"போலி அப்போஸ்தலர்கள், வஞ்சக வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக நடிக்கிறார்கள். இதில் ஒரு வியப்புமில்லை; சாத்தான் கூட ஒளியின் தூதனாக நடிக்கிறான். ஆகையால் அவனுடைய பணியாளராக நடிப்பது பெரிதா? அவர்களுடைய முடிவு அவர்களின் செல்களுக்கேற்றதாகவே இருக்கும்". (2 கொரி. 11:14-15).  
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
..................................................................................................................................................

4.   திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                                பாகம் : 4  
அண்மையில் புரோட்டஸ்டான்டாரில் ஒரு பிரிவினர் பைபிளை மொழி பெயர்த்து வெளியிடும் சமயம் அதில் ஒரு பிரிவினர் மொழிபெயர்ப்பு சரியில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை விதிக்க கோரினர். அதை விசாரித்த மாண்புமிகு நீதிபதியவர்கள் பைபிளுக்கு எந்த Patent-ம் கிடையாது. எனவே, தடை விதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்.  
ஆனால், கத்தோலிக்கத் திருச்சபையில் அந்த நிலை கிடையாது. 25-04-1979 போப்பாண்டவர் 2-ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட  "Nova Vulgata-Scripturarum Thesaurus" என்னும் தீர்ப்பாணையில் "எல்லா விவிலிய மொழிபெயர்ப்பு களும் இந்த புதிய வுல்காத்தா பைபிளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்" (ad eam versiones vulgarus referantur) என ஆணை பிறப்பித்துள்ளார். ஆக இந்த புத்தகம் கத்தோலிக்கர்களுக்கு மூலநூல் ஆகும்.  
அப்படிப்பட்ட உத்தரவிருந்தும் , திருவிவிலியம் புது வுல்காத்தாவுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படவில்லை என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களிலிருந்து எளிதில் அறியலாம்.  
1.        லூக்.11:50-51:  
பரிசுத்த வேதாகமத்தில் :  
"ஆபேலுடைய இரத்தம் முதல், பீடத்திற்கும் புனித இல்லத்திற்கும் இடையே மடிந்த சக்கரியாஸின் இரத்தம் வரை, உலகம் தோன்றியது முதல் சிந்தப்பட்ட இறைவாக்கினர்கள் அனைவரின் இரத்தத்திற்காக இத்தலைமுறையிடம் கணக்கு கேட்கப்படும்".  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் :  
"ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட இறைவாக்கினர் அனைவரின்  இரத்தத்திற்காகவும் இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்".  
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட  "சக்கரியாஸ்" பெயர்  
திருவிவிலியத்தில் நீக்கப்பட்டுள்ளது.  
2.    மாற்கு. 12:40 :  
"பரிசுத்த வேதாகமத்தில் :  
கைம்பெண்களின் உடைமைகளை விழுங்குகிறார்கள். பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள். இவர்கள் அதிக தண்டனைக்கு ஆளாவார்கள்".  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் :  
"கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக விருப்பவர்கள் இவர்களே".  
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட "பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள்", என்ற வார்த்தைகள் திருவிவிலியத்தில் நீக்கப்பட்டுள்ளது.  
3.      அருளப்பர்: 9:15 :  
பரிசுத்த வேதாகமத்தில்:  
"எப்படிப் பார்வை அடைந்தாய்" என்ற அதே கேள்வியைக் கேட்டனர். அவனோ அவர்களிடம், என் கண்களின் மேல் அவர் சேற்றைத் தடவினார்; போய்க் கழுவினேன்; இப்போது பார்க்கிறேன்" என்றார்.  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் :  
"எனவே, எப்படிப் பார்வை பெற்றாய்?" என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர்".  
ஆனால், "என் கண்களின் மேல் அவர் சேற்றைத் தடவினார்; போய்க் கழுவினேன்; இப்போது பார்க்கிறேன்".  
என்கிற இந்த வாக்கியம் திருவிவிலியத்தில் விடப்பட்டுள்ளது.  
4.      அருளப்பர்.18:18 :  
பரிசுத்த வேதாகமத்தில் :  
"ஊழியரும் காவலரும் கரி நெருப்பு மூட்டிச் சுற்றி நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். இராயப்பரும் அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்".  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் :  
"அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள்".  
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள  
"இராயப்பரும் அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்"  
என்னும் வார்த்தைகள் திருவிவிலியத்தில் விடப்பட்டுள்ளது.  
25-04-1979 போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் அவர்களால் வெளியிடப்பட்ட Scripturarum Thesaurus என்னும் பேராணையின் படி ஒப்பிட்டு சரி பார்த்திருந்தால், மேலே சொல்லப்பட்ட வார்த்தைகள் விடுபட்டிருக்காது.  
ஆக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள்வாக்கு,  
"விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச் சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தோ புள்ளியோ ஒழிந்து  போகாது" (மத்.5:18). என்றார்.  

இங்கே ஒரு கேள்வி?  
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருளிய மேற்கண்ட வாக்கியங்கள் பொய்யா?  
அல்லது " கெட்ட எண்ணத்துடன்  "திருவிவிலியம் வெளியிடப்பட்டதா? என்பதை,  படிக்கிறவர்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.  
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
.........................................................................

 5. திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                              பாகம் : 5  
திருவிவிலியத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  இறைத்தன்மை மற்றும்  மகிமையை  குறைத்து எழுதப்பட்டுள்ளது.  
1.    மத். 17:23.  
  பரிசுத்த வேதாகமத்தில் :  
"அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். அவர்  மூன்றாம் நாள்  உயிர்த்தெழுவார்" என்று சொல்ல,  அவர்கள் மிகவும்  வருந்தினர்.  
இந்த வசனம் திருவிவிலியத்தில்:   
"அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்". என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்".  
இங்கே கவனிக்க வேண்டியது ;  "உயிர்த்தெழுவார்" என்பதை "உயிருடன் எழுப்பப்படுவார்" என்று மாற்றியுள்ளார்கள்.  
2.     மத். 26:32.  
பரிசுத்த வேதாகமத்தில் :  
"ஆனால், நான் உயிர்த்த பின் கலிலேயாவிற்கு உங்களுக்கு முன் போவேன் என்று சொன்னார்".  
இந்த வசனம் திருவிவிலியத்தில் :  
"நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்" என்றார்".  
இங்கே கவனிக்க வேண்டியது ;  
"உயிர்த்த பின்" என்பதை "உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு"  என்று மாற்றியுள்ளார்கள்.  
3.     லூக்காஸ் - 9 : 22  
பரிசுத்த வேதாகமத்தில் :  
"மேலும், மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் என்று சொன்னார்"  
இந்த வசனம் திருவிவிலியத்தில் :  
" மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்று சொன்னார்."  
இங்கே கவனிக்க வேண்டியது ;   
"மூன்றாம் நாள் உயிர்த்தெழவும்" என்பதை "மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும்"  என்று மாற்றியுள்ளார்கள்.  
4.    லூக்.24:6-7.  
பரிசுத்த வேதாகமத்தில் :  
"அவர் இங்கே இல்லை உயிர்த்து விட்டார்".  
இந்த வசனம் திருவிவிலியத்தில் :  
" அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ".  
இங்கே கவனிக்க வேண்டியது ;  
"உயிர்த்து விட்டார்" என்பதை "உயிருடன் எழுப்பப்பட்டார்"  என்று மாற்றியுள்ளார்கள்.  
5.    அரு. 21:14.  
  பரிசுத்த வேதாகமத்தில் :  
"இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்த பின், தம் சீடர்க்கு இப்பொழுது தோன்றியது மூன்றாம்  முறை".  
இந்த வசனம் திருவிவிலியத்தில் :  
"இவ்வாறு இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்".  
இங்கே கவனிக்க வேண்டியது ;  
"உயிர்த்தெழுந்த பின்" என்பதை "உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு"  என்று மாற்றியுள்ளார்கள்.  
6.     மாற்கு.16:6.  
பரிசுத்த வேதாகமத்தில் :  
"அவன் அவர்களை நோக்கி, திகிலுற வேண்டாம். சிலுவையிலறையுண்ட நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிர்த்துவிட்டார் இங்கே இல்லை. இதோ, அவரை வைத்த இடம்".  
இந்த வசனம் திருவிவிலியத்தில் :  
"அவர் அவர்களிடம், திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்".  
இங்கே கவனிக்க வேண்டியது ;   
"அவர் உயிர்த்து விட்டார்" என்பதை "அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்"  என்று மாற்றியுள்ளார்கள்.  
7.     மத்.28:6.  
பரிசுத்த வேதாகமத்தில் :  
"அவர் இங்கே இல்லை; தாம் கூறிய படியே உயிர்த்து விட்டார். வாருங்கள் ஆண்டவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள்".  
இந்த வசனம் திருவிவிலியத்தில் :  
" அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்".  
இங்கே கவனிக்க வேண்டியது ;  
"தாம் கூறிய படியே உயிர்த்து விட்டார்" என்பதை "அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்"  என்று மாற்றியுள்ளார்கள்.  
இவ்வாறு "உயிர்த்தார்" என்பதை "உயிருடன் எழுப்பப்பட்டார்" என்று மாற்றி எழுதி ஆண்டவரின் தெய்வீகத்தை மறைத்து விட்டனர்.  
அதாவது, 'காலையில் 5 மணிக்கு நான் எழுந்தேன்' என்று சொல்வதை 'நான் காலையில் 5 மணிக்கு எழுப்பப்பட்டேன்' என்று சொன்னால், வீட்டில் யாரோ ஒருவரால் எழுப்பப்பட்டதாகவே கருத வேண்டும்.  
அர்ச். சின்னப்பர் கலாத்தியருக்கு எழுதியது,  
"கிறிஸ்துவின் அருளால் உங்களை அழைத்தவரை விட்டு விட்டு, இவ்வளவு குறுகிய காலத்தில், வேறொரு நற்செய்தியைப் பின்பற்றப் போய் விட்டீர்களே, எனக்கே வியப்பாய் இருக்கிறது. வேறொரு நற்செய்தி இருக்கிறது என்பதன்று; உங்கள் மனதைக் குளப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரிக்க விரும்பும் சிலர் உள்ளதுதான் தொல்லை".( கலா. 1: 6-7). என்றார்.  
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
...............................................................................................

 6.   திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                                பாகம் - 6 
மாதாவைப் பற்றி,  திருவிவிலியத்தில் அவசங்கை:  
1.   லூக். 1:34.  
பரிசுத்த வேதாகமத்தில் : 
 "மரியாள் தூதரிடம், இது எங்ஙனம் ஆகும் நானோ கணவனை அறியேனே" என்றாள். 
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
 "அதற்கு மரியா, வானதூதரிடம், இது எப்படி நிகழும்?, நான் கன்னி ஆயிற்றே என்றார்". 
இந்த வசனத்தில், மரியாளின் கன்னித்தன்மையைப் பற்றி தேவையில்லாத சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்கள். 
அதாவது :  
இயேசுவின் பிறப்பை பற்றி மரியாளிடம் கபிரியேல் சம்மனசு, அறிவித்தபோது, மரியாள், சூசை என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆனவள். திருமண நாளை எதிர்பார்த்திருப்பவர். திருமணம் ஆனவுடன் கணவரின் வீட்டுக்குச் செல்பவர். அதன் பிறகு, திருமணமான எந்தவொரு பெண்ணையும் போன்று கணவனோடு சேர்ந்து கருத்தரிப்பதற்கான வாய்ப்பும் உரிமையும் மரியாளுக்கு இருந்தது. அவ்வாறு, இருக்க, " இது எங்ஙனம் ஆகும்" என்னும் கேள்வி, ஏதோ தடையிருப்பதைக் காட்டுகிறது. அது என்னவென்பதை, "நானோ கணவனை அறியேனே" என்னும் வார்த்தைகள் காட்டுகின்றன. "அறியேனே" என்னும் வினைச்சொல் முக்காலப் பொருண்மையை அதாவது எதிர்காலப் பொருண்மையைத் தெளிவாகக் கொண்டது. அதன் பொருள், "நான் என்றைக்கும் கணவனை அறியாமல் வாழப்போகிறவள் ஆயிற்றே", இது எப்படி சாத்தியமாகும், என்று கேட்ட மரியாள், அடுத்த நிமிடமே இறைவனின் வார்த்தைக்கு அடிபணிந்து, "இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தைப்படியே ஆகட்டும்" (லூக்.1:38) என்றாள்.  
 திருவிவிலியத்தில் சொல்லப்பட்ட, "நான் கன்னி ஆயிற்றே " என்னும் வார்த்தைகளில், மரியாள் அப்போது கன்னியாக இருந்தாள் என்பதே ஒழிய, வருங்காலத்திலும் கன்னியாக இருப்பாள் என்பது இல்லை. அதாவது, "நான் கணவனை அறியேனே"(கணவனாகப் போகிறவரை மரியாள் அறிந்திருந்தார்) என்பதிலேயுள்ள எதிர்காலப் பொருண்மை, "நான் கன்னி ஆயிற்றே"(இப்போது கன்னியாயிருப்பவள்  கல்யாணமானவுடன் கன்னியாக இருக்க மாட்டார் என்பது இயற்கை விதி) என்பதில் இல்லை. 
இங்கே கவனிக்க வேண்டியது, மனுக் குலத்தின் முதல் பெண்மணி "ஏவாள்" சாத்தானின் வார்த்தைக்கு அடிபணிந்தது.  
எனவேதான், ஆண்டவர் ஒரு பெண்ணின் மூலமே சாத்தானின் தலையை நசுக்க முடிவு செய்து, சாத்தானிடம், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலை தீண்ட முயலுவாய் என்றார்"(ஆதி.3:15).  
ஆக, முதல் பெண்ணினால் சாவு மனுக்குலத்தை தீண்டியது, மரியாள் என்னும் பெண்ணினால், மனுக்குலம் மீட்பு பெற இறைவன் சித்தம் கொண்டார். 
இவ்வாறு மரியாளின் முக்காலக் கன்னிமைக்கு விவிலியத்தில் காணக்கூடிய இந்த அதி முக்கிய ஆதாரம் திருவிவிலியத்தில் வேண்டுமென்றே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  
கத்தோலிக்க விசுவாசிகளே கீழ்க்காணும்  வேதாகம வசனத்தை நினைவில் கொள்ளுங்கள். 
"தாங்கள் பெருமை பாராட்டிக் கொள்ளும் அப்போஸ்தலப் பணியில் எங்களுக்கு நிகராய்த் தென்படச் சிலர் வாய்ப்பு தேடுகிறார்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டாதபடி நான் இப்போது செய்வதையே தொடர்ந்து செய்து வருவேன். இத்தகையதோர் போலி அப்போஸ்தலர்கள், வஞ்சக வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக நடிக்கிறார்கள். இதில் ஒரு வியப்புமில்லை; சாத்தான் கூட ஒளியின் தூதனாக நடிக்கிறான். ஆகையால் அவனுடைய பணியாளராக நடிப்பது பெரிதா? அவர்களுடைய முடிவு அவர்களின் செல்களுக்கேற்றதாகவே இருக்கும்". 2 கொரி. 11:12-15.  

ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
......................................................................................

7.     திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                                பாகம் - 7
மாதாவைப் பற்றி,  திருவிவிலியத்தில் அவசங்கை: 
"அருள் நிறைந்தவரே" என்பதற்கு பதிலாக "அருள் மிகப் பெற்றவரே" என்று திட்டமிட்டு மாற்றியது - 
லூக்.1:26-28 :  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள்  கலிலேயாவிலுள்ள நாசரேத்து  என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம்  அனுப்பினார். அவள் தாவீது குலத்தவராகிய சூசை என்பவருக்கு  மண  ஒப்பந்தமானவள். அவள்  பெயர் மரியாள். தூதர் அவளது இல்லம் சென்று, "அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே" என்றார். (ஆறாம் மாதத்திலே என்றால், மலடி எனப்பட்ட எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதம் ஆகும்). 
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில், 
 "ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி "அருள் மிகப் பெற்றவரே " வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். 
போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் 25-04-1979-ல் வெளயிட்ட "Nova Vulgata-Scripturarum Thesaurus" என்னும் கத்தோலிக்கர்களின் அதிகாரப்பூர்வமான பைபிளில், "Ave gratia plena" அதாவது "அருள் நிறைந்தளே வாழ்க" என்று தான் உள்ளது.  
பரிசுத்த வேதாகமத்தில் 
 "அருள் நிறைந்தவளே வாழ்க" என்ற சொல் திருவிவிலியத்தில் " அருள் மிகப் பெற்றவரே வாழ்க" என்று திட்டமிட்டு பிரிவினை சபையாரை திருப்திபடுத்த மாற்றப்பட்டது.  
மார்ட்டின் லூத்தர் ( லூத்தரன் மிஷன் ஸ்தாபகர், முன்னாள் கத்தோலிக்க குருவானவர்) மரியாளுக்கு அருளை வழங்கும் சக்தி கிடையாது. அருளை வழங்க ஆண்டவரால் மட்டுமே முடியும். எனவே,  கிரேக்க வார்த்தையான Kekaritomane அதாவது, அருள் மிகப் பெற்றவர் என்பதற்கு மட்டுமே தகுதியானவர் என்று பிரச்சாரம் செய்தார். இதை உறுதி படுத்தி இங்கிலாந்து கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த Tyndale என்கிற ஆங்கில அறிஞரும், Reina மற்றும்  Valwa என்கிற ஸ்பானிய அறிஞர்களும் பிரச்சாரம் செய்தனர்.  
மேலும், பரிசுத்த பாப்பரசர் 9ம் பத்திநாதர்(Pope Pius IX) 8-12-1954ல் மரியாளின் அமல உற்பவம் பற்றிய ஒரு பிரகடனம் செய்தார். அதாவது, "Her fullness of grace" meant Kar "She was loved by God more than all creatures, that he found extreme pleasure in her, and that he loaded her in a wonderful way with his graces, more than all the angels and saints" (Bull- ineffabilis Deus, Denzinger loc, cit, 8-12-1954). 
ஆக கத்தோலிக்க மத்திலிருந்து பிரிந்து போன பிரிவினை சபையாளர்களை திருப்திபடுத்த திட்டமிட்டு, மரியாளின் மகிமையைக் குறைத்து, "அருள் நிறைந்த மரியே வாழ்க"என்பதற்கு பதிலாக "அருள் மிகப் பெற்றவரே வாழ்க" என்று மாற்றி எழுதியுள்ளனர். 
எனவே, கத்தோலிக்க விசுவாசிகளே, அர்ச். சின்னப்பர் கொலோசெயருக்கு எழுதியதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.  
அதாவது, 
"நீங்கள் கேட்ட நற்செய்தியில் அடங்கியுள்ள நம்பிக்கையை நழுவ விடாது, விசுவாசத்தில் உறுதியாக ஊன்றி நிலைத்து நிற்க வேண்டும்". கொலோ. 1:23  

ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
...........................................................................................

8. திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                            பாகம் : 8  
1. அரு. 20:27.  
பரிசுத்த வேதாகமத்தில்,  
" பின்பு தோமையாரை நோக்கி, 'இங்கே உன் விரலை இடு; இதோ என் கைகள், உன் கையை நீட்டி என் விலாவில் இடு; விசுவாசம் அற்றவனாயிராதே விசுவாசங்கொள்" என்றார்.  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
" பின்னர் அவர் தோமாவிடம், இதோ, என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைக் கொள்" என்றார்.    
இங்கே விசுவாசம் என்பதற்கு  
இரண்டு வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். அதாவது,  
ஐயம் மற்றும் நம்பிக்கை  
என மாற்றப்பட்டுள்ளதைக் காண்க.  
2. மத்.10:42,  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"என் சீடன் என்பதற்காக இச்சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான்" என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்" என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.  
தமிழ்  நாட்டில், (i) தண்ணீர், (ii) சுடு தண்ணீர் (வெந்நீர் ) மற்றும் (iii) குளிர்ந்த நீர்(சில்லென்று தண்ணீர்) என்று சொல்வது வழக்கம்.  
சாதாரண நீரை தண்ணீர் என்று சொல்வது தான் வழக்கம்,  
இங்கே குளிர்ந்த நீர் என்று சொல்வது தேவையில்லாத மாற்றம் .  
3. லூக்.8:27-28.  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"கரை ஏறியதும் அந்த ஊரைச் சார்ந்த ஒருவன் அவருக்கு எதிரே வந்தான். அவன் பேய் பிடித்தவன். நெடுநாளாய் ஆடையணியாது, வீட்டிலும் தங்காது, கல்லறைகளில் தங்கியிருந்தான். இயேசுவைக் கண்டதும், கூக்குரலிட்டு அவர் முன் விழுந்து, இயேசுவே, உன்னதக் கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்". உம்மை மன்றாடுகிறேன்: என்னை வதைக்க வேண்டாம் என உரக்கக் கத்தினான்.  
 மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"கரையில் இறங்கியதும் அந்நகரைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு எதிரே வந்தார். பேய் பிடித்த அவர் நெடுநாளாய் ஆடை அணிவதில்லை; வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கி வந்தார். இயேசுவைக் கண்டதும் கத்திக் கொண்டு அவர் முன் விழுந்து, இயேசுவே, உன்னதக் கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை" என்னை வதைக்க வேண்டாம் என உம்மிடம் மன்றாடுகிறேன் என்று அவர் உரத்தக் குரலில் கூறினார்.  
இங்கே கவனிக்க வேண்டியது,  
"என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்" என்பதை  
"உமக்கு இங்கு என்ன வேலை?"  
என்று கொச்சைப் படுத்தி எழுதியுள்ளதைக் காண்க.  
4. மத்.8:2,  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"இதோ, தொழு நோயாளி ஒருவன் வந்து அவரைப் பணிந்து, ஆண்டவரே நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்றான்.  
இவ்வசனம், திருவிவிலியத்தில்,  
"அப்பொழுது தொழு நோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்.  
இங்கே கவனிக்க வேண்டியது  
ஆண்டவர் என்பது  
ஐயா - வாக மாற்றப்பட்டுள்ளது.  
ஆண்டவர் என்பதும், ஐயா என்பதும் ஒரே அர்த்தம் உள்ள சொற்களா?  
தமிழ்நாட்டில் யாரேனும்,  
"ஆண்டவரே" என்று செபிப்பதற்குப் பதிலாக,  
"ஐயா" என்று கோவிலில் செபித்ததைக்  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  
5. மாற்கு.7:28,  
பரிசுத்த வேதாகமத்தில்,  
" அவளோ மறுமொழியாக ஆமாம் ஆண்டவரே, ஆனால், மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே என்றாள்.  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"அதற்கு அப்பெண், ஆம் ஐயா", ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே என்று பதிலளித்தார்".     
இங்கே கவனிக்க வேண்டியது  
ஆண்டவர் என்பது  
ஐயா - வாக மாற்றப்பட்டுள்ளது.  
ஆண்டவர் என்பதும், ஐயா என்பதும் ஒரே அர்த்தம் உள்ள சொற்களா?  
6. லூக்.20:42-43,  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது, நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கத்தில் அமரும் எனத் தாவீதே சங்கீத ஆகமத்தில் சொல்லுகிறார்".            
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில், "ஆண்டவர் என் தலைவரிடம்", நான் உம் பகை வளர உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கத்தில் வீற்றிரும் என்றுரைத்தார்". எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா"      
இங்கே கவனிக்க வேண்டியது.  
"ஆண்டவர்" என்பது "தலைவராக" மாற்றப்பட்டுள்ளது.  
தமிழ் கலாச்சாரத்தில் தலைவர் என்று யாரைச் சொல்லுகிறோம்.  
தமிழ்நாட்டில் யாரேனும்,  
"ஆண்டவரே" என்று செபிப்பதற்குப் பதிலாக,  
"ஐயா" என்று கோவிலில் செபித்ததைக்  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  
தமிழ்நாட்டில், எந்த மதத்திலும் "ஆண்டவரைத்" "தலைவர்" என்று சொல்லும் வழக்கம் கிடையாது. ஆனால், இங்கே ஏனோ? இப்படி? என்றுத் தெரியவில்லை.  
7. மத்.22:43, 44,  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"அதற்கு அவர் அப்படியானால் தாவீது தேவ ஆவியால் ஏவப்பட்டு, அவரை ஆண்டவர் என்று அழைப்பது எப்படி? ஏனெனில், ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது, நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கத்தில் அமரும் எனச் சொல்லியிருக்கிறாரே"  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"இயேசு அவர்களிடம் அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி? ஆண்டவர் என் தலைவரிடம், நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் என்று  உரைத்தார் என அவரே கூறியுள்ளார் அல்லவா".   
இங்கே கவனிக்க வேண்டியது.  
"ஆண்டவர்" என்பது "தலைவராக" மாற்றப்பட்டுள்ளது.  
தமிழ் கலாச்சாரத்தில் தலைவர் என்று யாரைச் சொல்லுகிறோம்.  
தமிழ்நாட்டில் யாரேனும்,  
"ஆண்டவரே" என்று செபிப்பதற்குப் பதிலாக,  
"ஐயா" என்று கோவிலில் செபித்ததைக்  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  
தமிழ்நாட்டில், எந்த மதத்திலும் "ஆண்டவரைத்" "தலைவர்" என்று சொல்லும் வழக்கம் கிடையாது. ஆனால், இங்கே ஏனோ? இப்படி? என்றுத் தெரியவில்லை.  
8. மாற்கு. 12:36,  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"மேலும், இயேசு கோயிலில் போதித்துக் கொண்டிருந்த போது, மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் எப்படிக் கூறலாம்? ஏனெனில், ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை, நீர் என் வலப் பக்கத்தில் அமரும் எனத் தாலீ ரே ரிசுத்த ஆவியின் ஏவுதலால் கூறியிருக்கிறார்",  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும் போது, மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால் ஆண்டவர் என் தலைவரிடம் நான் உன் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் என்று உழைத்தார், எனத் தாவீ தே கூறியுள்ளார் அல்லவா",  
இங்கே கவனிக்க வேண்டியது,  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"இயேசு கோவிலில் போதித்துக் கொண்டிருந்த போது" என்பது "கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது" என்று மாற்றியுள்ளனர். போதிக்கிறது என்பது கோயிலில் செய்யும் பிரசங்கத்தைக் குறிக்கும். ஆனால், கற்பிப்பது என்பது, பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளில் பாடம் நடத்துவதைக் குறிக்கும்.  
இங்கே கவனிக்க வேண்டியது.  
"ஆண்டவர்" என்பது "தலைவராக" மாற்றப்பட்டுள்ளது.  
தமிழ் கலாச்சாரத்தில் தலைவர் என்று யாரைச் சொல்லுகிறோம்.  
தமிழ்நாட்டில் யாரேனும்,  "ஆண்டவரே" என்று செபிப்பதற்குப் பதிலாக,  
"ஐயா" என்று கோவிலில் செபித்ததைக்  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  
தமிழ்நாட்டில், எந்த மதத்திலும் "ஆண்டவரைத்" "தலைவர்" என்று சொல்லும் வழக்கம் கிடையாது. ஆனால், இங்கே ஏனோ? இப்படி? என்றுத் தெரியவில்லை.  

"சகோதரர்களே, நான் உங்களை வேண்டுவது: நீங்கள் கற்றுக் கொண்ட போதனையை மீறி, பிளவுகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர் மேல் கண்ணாயிருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள். ஏனெனில்  இத்தகையோர் நம் ஆண்டவராகிய  கிறிஸ்துவுக்கு அடிமைகள் அல்லர், தங்களுடைய வயிற்றுக்கே அடிமைகள். இவர்கள் தங்கள் இனிய சொற்களாலும், நயமான மொழிகளாலும்  கபடமற்றவர்களின் உள்ளங்களை வஞ்சிக்கிறார்கள்". உரோ.16:17-18.
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
...................................................................................................

9   திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                              பாகம் - 9
1.       பரிசுத்த வேதாகமத்தில், "என் சீடன் என்பதற்காக இச்சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம்  தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான்" (மத்.10:42) என்று இருந்ததை ஒடுக்கப்பட்டோருக்கும், எளியோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி,  திருவிவிலிய முன்னுரை 7-ம் பாராவில், "பெரும்பாலோர்க்கும் மரியாதைப் பன்மை வழங்கப்படுகிறது. நோயுற்றோர், உடல் ஊனமுற்றோர், செல்வாக்கற்ற பணியாளர், பெண்டிர் ஆகியோரை மதிப்பின்றி வழங்கும் முறை தவிர்க்கப்படுகிறது" என்று தெரிவித்து, மேற்கண்ட வசனத்தில் மரியாதைக் கொடுத்து, "இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்" (மத்.10:42) என்று ஒடுக்கப்பட்டோருக்கும், எளியவர்களுக்கும் மரியாதை கொடுத்து எழுதியவர்கள், அதே திருவிவிலியத்தில் அந்த மரியாதை மாதாவுக்கு வழங்கப்படவில்லை. அதாவது,  "இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பாள்" (இசை.7 : 14). 
2.       பரிசுத்த வேதாகமத்தில், "இரு பெண்கள் சேர்ந்து மாவரைப்பர், ஒருத்தி எடுக்கப்படுவாள்; மற்றவள் விடப்படுவாள்" (லூக்.17:35) என்று இருந்ததை ஒடுக்கப்பட்டோருக்கும், எளியோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து,  திருவிவிலிய முன்னுரை 7-ம் பாராவில், "பெரும்பாலோர்க்கும் மரியாதைப் பன்மை வழங்கப்படுகிறது. நோயுற்றோர், உடல் ஊனமுற்றோர், செல்வாக்கற்ற பணியாளர், பெண்டிர் ஆகியோரை மதிப்பின்றி வழங்கும் முறை தவிர்க்கப்படுகிறது" என்று சொல்லி,  திருவிவிலியத்தில், மேற்கண்ட வசனத்தில் மரியாதைக் கொடுத்து, "இருவர் சேர்ந்து மாவரைத்துக் கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்", (லூக்.17:35)என்று ஒடுக்கப்பட்டோருக்கும், எளியவர்களுக்கும் மரியாதை கொடுத்து எழுதியவர்கள், அதே திருவிவிலியத்தில் அந்த மரியாதை ஆண்டவராகிய இயேசுவுக்கு வழங்கப்படவில்லை. அதாவது,  "உயிர்த்தெழச் செய்பவனும், வாழ்வு தருபவனும் நானே" (யோவான்.11: 25) 
  3.    பரிசுத்த வேதாகமத்தில், "கரை ஏறியதும் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன் அவருக்கு எதிரே வந்தான். அவன் பேய் பிடித்தவன். நெடுநாளாய் ஆடையணியாது, வீட்டிலும் தங்காது, கல்லறைகளில் தங்கியிருந்தான்"(லூக்.8:27) என்று இருந்ததை ஒடுக்கப்பட்டோருக்கும், எளியோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி,  திருவிவிலிய முன்னுரை 7-ம் பாராவில், "பெரும்பாலோர்க்கும் மரியாதைப் பன்மை வழங்கப்படுகிறது. நோயுற்றோர், உடல் ஊனமுற்றோர், செல்வாக்கற்ற பணியாளர், பெண்டிர் ஆகியோரை மதிப்பின்றி வழங்கும் முறை தவிர்க்கப்படுகிறது" என்று தெரிவித்து          திருவிவிலியத்தில், மேற்கண்ட வசனத்தில் மரியாதைக் கொடுத்து,      "கரையில் இறங்கியதும் அந்நகரைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு எதிரே வந்தார். பேய் பிடித்த அவர் நெடுநாளாய் ஆடை அணிவதில்லை; வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கி வந்தார்"(லூக்.8:27) என்று ஒடுக்கப்பட்டோருக்கும், எளியவர்களுக்கும் மரியாதை கொடுத்து எழுதியவர்கள், திருவிவிலியத்தில் அந்த மரியாதை ஆண்டவராகிய இயேசுவுக்கு வழங்கப்படவில்லை. அதாவது,  " என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்"(லூக்.3:21). 
"கடவுளின் வார்த்தை நெருப்பினால் (பரிசுத்தப்) பட்டது. அதை நம்பி  இருக்கின்றவர்களுக்கு (அது) கேடயமாம். நீ கண்டிக்கப்பட்டுப் பொய்யனாய் போகாதபடி அவருடைய வார்த்தைகளோடு யாதொன்றையும் சேர்க்காதே". பழமொழி ஆகமம். 30:5-6
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
............................................................................................................

10. திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                                பாகம் : 10  
1. மத்.11:29, 30.   
பரிசுத்த வேதாகமத்தில்   
"உங்கள் மேல் என் நுகத்தை ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் சாந்தமும் மனத் தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும். ஆம் என் நுகம் இனிது, என் சுமை எளிது",   
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
" நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம் என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்றார்.   
என மாற்றப்பட்டுள்ளது.   
இங்கே கவனிக்கவும்,   
பரிசுத்த வேதாகமத்தில், "ஆன்மாவிற்கு இளைப்பாற்றி" என்பதற்கும்;  
திருவிவிலியத்தில், "உள்ளத்திற்கு இளைப்பாறுதல்" என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது.   
முன்னது (பரிசுத்த வேதாகமம்) ஆன்மிகத்தை குறிக்கிறது.   
பின்னது (திருவிவிலியம்) லவுகீகத்தை அதாவது உலக வாழ்க்கையின் சுகத்தைக் குறிக்கிறது.  
2. லூக்.10:27.   
பரிசுத்த வேதாகமத்தில்,  
"அவர் மறுமொழியாக, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு வலிமையோடும், முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக".  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"அவர் மறுமொழியாக, உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக",  
என்றும் மாற்றப் பட்டுள்ளது.இங்கே, "முழு ஆன்மாவோடும்" என்பது "முழு உள்ளத்தோடும்'' என மாற்றப்பட்டுள்ளது.  
இங்கே கவனிக்கவும்.  
முன்னது (பரிசுத்த வேதாகமம்) ஆன்மிகத்தை குறிக்கிறது.   
பின்னது (திருவிவிலியம்) லவுகீகத்தை அதாவது உலக வாழ்க்கையின் சுகத்தைக் குறிக்கிறது.  
3. லூக்.21:19.   
பரிசுத்த வேதாகமத்தில்,  
"நிலைத்து நின்றால், உங்கள் ஆன்மாக்களை மீட்டுக் கொள்வீர்கள்".  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்",  
என்றும், மாற்றப்பட்டுள்ளது.   
இங்கே கவனிக்கவும்.   
முன்னது (பரிசுத்த வேதாகமம்) ஆன்மிகத்தை குறிக்கிறது.   
பின்னது (திருவிவிலியம்) வவுகீகத்தை அதாவது உலக வாழ்க்கையின் சுகத்தைக் குறிக்கிறது.  
4. நீதிபதிகள்.5:21.  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"என் ஆன்மாவே வலியோரை மிதித்துத் தள்ளு",   
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"என் உயிரே வலிமையுடன் பீடு நடை போடு",  
என்றும், மாற்றப்பட்டுள்ளது.   
இங்கே கவனிக்கவும்.   
வலிமையுடன் பீடு நடை என்றால் என்ன அர்த்தமோ? ஆக, முன்னது (பரிசுத்த வேதாகமம்) ஆன்மிகத்தை குறிக்கிறது.   
பின்னது (திருவிவிலியம்) லவுகீகத்தை அதாவது உலக வாழ்க்கையின் சுகத்தைக் குறிக்கிறது.  
5. எபி.13:17.  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"உங்கள் ஆன்ம நலனில் விழிப்பாய் இருக்கின்றனர்".  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள்",  
என்றும், மாற்றப்பட்டுள்ளது.   
இங்கே கவனிக்கவும்.  
"ஆன்ம நலன்" என்பதற்கும், "உங்கள் நலன்" என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை யோசித்துப் பாருங்கள். ,  
முன்னது(பரிசுத்த வேதாகமம்) ஆன்மிகத்தை குறிக்கிறது.  
பின்னது (திருவிவிலியம்) லவுகீகத்தை அதாவது உலக வாழ்க்கையின் சுகத்தை குறிக்கிறது.  
6. லூக்.1:80.   
பரிசுத்த வேதாகமத்தில்,  
"பாலனோ, ஆன்ம வலிமையோடு வளர்ந்து வந்தார்".  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார்".  
என்றும், மாற்றப்பட்டுள்ளது.   
ஆன்ம வலிமை என்பது இறை பற்று, ஆனால்,  
மன வலிமை என்பது மன தைரியத்தை குறிக்கும் சொல்.  
இங்கே கவனிக்கவும்.   
முன்னது (பரிசுத்த வேதாகமம்) ஆன்மிகத்தை குறிக்கிறது.  
பின்னது (திருவிவிலியம்) வவுகீகத்தை அதாவது உலக வாழ்க்கையின் சுகத்தைக் குறிக்கிறது.  
7. மத்.16:26.   
பரிசுத்த வேதாகமத்தில்,  
" ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்கு கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயன் என்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்".  
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்".  
என்றும், மாற்றப்பட்டுள்ளது.   
இங்கே கவனிக்கவும்.   
ஆன்மாவும் வாழ்வும் ஒன்று தானா?  
வாழ்விழந்த பெண்கள் என்றும் வாழ்வற்ற குழந்தைகள் என்றும் பேசப்படுவது சர்வ சாதாரணம். வாழ்விழந்த அகதிகளைப் பார்க்கிறோம். அகதிகளின் மறுவாழ்வு பற்றி பேசுகிறோம் ?   
இதிலிருந்து, ஆன்மாவும் வாழ்வும் ஒரே அர்த்தம் கொண்டதில்லை, என நாம் உணர முடிகிறது.  
அந்நாட்களில், எரேமியாஸ் தீர்க்கதரிசி சொன்னதாவது : 
" ஆகவே சேனைகளின் ஆண்டவர் தீர்க்கதரிசிகளைக் குறித்து கூறியது இதுவே.   
இதோ, அவர்களுக்கு உண்ண எட்டியையும், குடிக்க நஞ்சு கலந்த நீரையும் கொடுப்போம் : யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடமிருந்தே கடவுட் பற்றின்மை நாடங்கும் பரவிற்று. சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார். உங்களுக்குத் தீர்க்கத்தரிசினம் சொல்லி வீண் நம்பிக்கைகளை உங்களுக்குத் தந்து உங்களை மயக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்குக் காது கொடாதீர்கள். அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று; அவர்களுடைய சொந்த மனசாட்சியே ஆகும்".  எரே. 23:15-16.   
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
...................................................................................................
 
11.  திருவிவிலியம் ஒரு போலி பைபிள் :           
                                பாகம் : 11  
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து புனிதர்களின் பெயரை மாற்றியது :  
1.இராயப்பர், அருளப்பர், சின்னப்பர் போன்ற பெயர்களை பிரிவினை சபையார்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு, பேதுரு, யோவான், பவுல் என்Iறு மாற்றினார்கள்.  
அதன்படி, ரூத்து, லேவி, ரூபன் மற்றும் ரெபேக்கா போன்ற பெயர்களை சுத்த தமிழில் எழுதினால், உரூத்து, இலேவி, உரூபன் மற்றும் இரெபேக்கா என்று தான் எழுத வேண்டும். ஏனென்றால் இடையினத்தை வைத்து பெயர் துவங்கினால், அந்த பெயர் முன் உயிரெழுத்து சேர்க்க வேண்டும் என்பது தமிழ் இலக்கணம். அப்படியிருக்க சுத்த தமிழ் இலக்கணப்படி எழுதாதது ஏன்? ஆக திருவிவிலியத்தை உருவாக்கியவர்களுக்கெல்லாம், தமிழ் இலக்கணம் மற்றும் சுத்த தமிழ் ஆகியவைகள் பற்றி அக்கறையில்லை.  
1985- அக்டோபர் மாத தென் ஒலி இதழில்,  பரிசுத்த வேதாகமத்தை மாற்றி எழுத வேண்டும் என்று சொன்னதைத் திட்டமிட்டு செயல்படுத்தி, பரிசுத்த வேதாகமத்தை பாழடித்து, திருவிவிலியத்தை வெளியிட்டார்கள்.  
2.வடமொழி எழுத்துக்களை அறவே விட்டு விட வேண்டும் என்று கூறி (St.Joseph) அர்ச். சூசையப்பரின் (மத்.3:13) பெயரை  ஜோசப் என்பதற்குப் பதில் யோசப் என்று தானே எழுத வேண்டும். யோசேப்பு என்று "பு" என்கிற எழுத்தை கடைசியில் மாற்றியது ஏனோ?   
மேலும், பழைய ஏற்பாட்டில், இஸ்ராயேலரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தவர், "மோயீசன்" ஆவார். Douay-Rheims Catholic Bible states about Moses :   
"And she adopted him for a son, and called him "Moses", saying: Because I took him out of the water" ( Exodus.2:10). Moses என்பதற்கு எகிப்து மொழியில் தண்ணீரிலிருந்து காப்பாற்றப்பட்டவர் (அல்லது தண்ணீரியிருந்து எடுக்கப்பட்டவர்) என்பதாகும். இந்த மோசஸ் பெயரை "மோசே " என்று எழுதியது ஏனோ தெரியவில்லை. அதாவது, திருவிவிலியத்தில், "நீரிலிருந்து நான் எடுத்தேன் என்று கூறி அவள் அவனுக்கு 'மோசே' என்று பெயரிட்டாள்".  
ஆக வடமொழிச் சொற்களை நீக்கி விட்டதாகச் சொன்னவர்கள், St. Stephen (அப்.பணி. 6:8) என்பதை, "ஸ்தேவான்" என்று வடமொழிச் சொல்லை,  திருவிவிலியத்தில் எழுதக் காரணமென்ன ? அதாவது,  
"ஸ்தேவான்" அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்" (திருத்தூதர் பணிகள் 6 : 8).  
ஏற்கனவே, St. Stephen என்ற பெயரை,  பரிசுத்த வேதாகமத்தில் "முடியப்பர்" என்று  எழுதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
ஆக, வடமொழியை விட்டு சுத்த தமிழ் என்று சொன்னவர்கள், "ஸ்தேவான்" என்று எழுதியதிலிருந்து அவர்களின் கெட்ட எண்ணம் நன்கு புலப்படுகிறது.  
3.St.James அதாவது, ஜேம்ஸ் என்ற பெயரில் இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன. அதாவது, 'ஜே' மற்றும் 'ஸ்'.  ஏற்கனவே பரிசுத்த வேதாகமத்தில் St.ஜேம்ஸ் என்பதை யாகப்பர் என்று அழைக்கப்பட்டு வந்தது. திருவிவிலியத்தில் யாகப்பர் என்று எழுதக் கூடாது என்பதற்காக, யாக்கோபு எழுதிய திருமுகம் என எழுதியுள்ளார்கள். யாக்கோபு என்பது பழைய ஏற்பாட்டில் Jacob (ஆதி. 25:26) ஆதி ஆகமத்தில் சொல்லப்பட்டவருக்கும், ஆண்டவராகிய இயேசுவின் உறவினரும்  சீடருமான James யாகப்பர் (கலா.1:19) என்பவருக்கும் ஒரே மொழிபெயர்ப்பா? இரண்டும் ஒரே பெயரானது எப்படி? அதாவது, Jacob மற்றும் James என்ற இரண்டு பெயரையும் "யாக்கோபு" என ஒரே பெயராக்கியது ஏனோ?   
ஆக, வடமொழியை விட்டு சுத்த தமிழ் என்று சொன்னவர்கள்,  இரண்டு பெயர்களை அதாவது இரண்டு நபர்களை ஒரே நபராக, அதாவது யாக்கோபு என்று மாற்றியதினால், பரிசுத்த வேதாகமத்தை சீர்குலைக்க வேண்டும் என்கிற அவர்களின் கெட்ட எண்ணம் நன்கு புலப்படுகிறது.   
4.   புனித நூலான பரிசுத்த வேதாகமத்தில், சில வசனங்கள் "சந்தைக் கடை (Street Language) பேச்சாக மாற்றி, திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது.  
a)     பல நாட்கள் பேய் பிடித்த ஒருவனிடமிருந்து ஆண்டவர் இயேசு பேயை ஓட்டும்போது, அந்த பேய் இயேசுவிடம், "இயேசுவே, உன்னதக் கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்" (மாற்கு.5 :7). என்ற பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப் பட்ட வசனம்,    
திருவிவிலியத்தில் தெருவில் பேசுகிற மாதிரி,  
"உமக்கு இங்கு என்ன வேலை "   
என்று சாத்தான், ஆண்டவரையே கேள்வி கேட்கிற மாதிரி மொழிபெயர்த்து எழுதியதால் அவர்களின் கெட்ட எண்ணம் நன்கு புலப்படுகிறது.  
b)     இயேசு மக்களுக்கு போதித்துக் கொண்டிருக்கும் போது, "இப்பொழுது திருப்தியாயிருப்பவர்களே உங்களுக்கு ஐயோ கேடு"(லூக்.6:25) என பரிசுத்த வேதாகமத்தில் செல்லப்பட்ட  வசனம்,  
திருவிவிலியத்தில்,  
"இப்போது உண்டு கொழுதிருப்போரே",  
என சந்தைக் கடை பேச்சாக மாற்றப்பட்டுள்ளது ஏனோ?  
c)     மறுநாள் காலை கல்லறைக்கு வந்து பார்த்த போது, "வெண்ணாடை அணிந்து வலப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனை........" (லூக்.16:5) என்ற, பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனம்,  
திருவிவிலியத்தில்,  
"தொங்கல் ஆடை அணிந்திருந்த இளைஞர் ஒருவர்........" (லூக்.16:5) என்று மாற்றியுள்ளனர்.  
இவ்வாறு குருக்கள் அணியும் அங்கியை கேவலப்படுத்தி திருவிவிலியத்தில் எழுதியுள்ளனர்?  
5.சுவிசேசம் எழுதியவர்கள், மத்தேயு, மாற்கு, லூக்காஸ், அருளப்பர் என நான்கு பேர்களாவார்கள். ஆங்கிலத்தில்  Mark என்பதை பரிசுத்த வேதாகமத்தில் "மாற்கு"  என்று அழைத்தார்கள்.  
ஆனால் திருவிவிலியத்தில் "மார்க்" என்று மாற்றினார்கள்.  
அதைப் போல், Luke  என்றிருந்ததை பரிசுத்த வேதாகமத்தில் ''லூக்காஸ்" என்று அழைத்தார்கள்.    
ஆனால், திருவிவிலியத்தில் "லூக்கா" என்று மாற்றினார்கள்.  
   
இங்கே கவனிக்க வேண்டியது, மாற்கு - Mark - என்பதை திருவிவிலியத்தில் மார்க் என்று மாற்றியவர்கள், லூக்காஸ் - Luke - என்பதை "லூக்" என்று தானே எழுத வேண்டும், அனால் லூக்கா என்று எழுதியது ஏனோ? தெரியவில்லை.  
திருவிவிலியத்தில், Mark என்பதை "மார்க்"  என்றால், Luke என்பதை திருவிவிலியத்தில், "லூக்" என்று தானே மாற்ற வேண்டும். ஆனால், லூக்கா என்று எழுதியது ஏனோ? தெரியவில்லை.  
அதைப் போல்,  
திருவிவிலியத்தில்,  
Luke என்பதை "லூக்கா" என்றால், Mark என்பதை "மார்க்கா" என்று தானே எழுத வேண்டும். ஆனால், " மார்க்" என்று எழுதியது ஏனோ?   
   
இவ்வாறு பரிசுத்த வேதாகமத்தின் புனிதத்தை பாழடித்து திருவிவிலியத்தை வெளியிட்டுள்ள்னர்.  
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்குச் சொன்னதாவது,  
"விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆயினும் மனு மகன் வரும் பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ?" என்றார். லூக்.18:8.  
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
....................................................................................................

12.  திருவிவிலியம் ஒரு போலி பைபிள். 
                             பாகம் :  12. 
அந்த அந்த காலங்களில் என்னென்ன வழக்கங்கள் உள்ளனவோ, அவைகளை அப்படியே பயன்படுத்துவதும் பின்பற்றுவதும்தான் அந்த காலத்தின்  பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
1.  ஆதி .24:22. 
  பரிசுத்த வேதாகமத்தில், 
"நீர் குடித்த பின் இரண்டு சீக்கல் நிறையுள்ள காப்புக்களையும் எடுத்து  அவளுக்குக் கொடுத்தான்".   
 மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"ஒட்டகங்கள் நீர் குடித்து முடித்த பின் அவர் அவருக்கு ஆறு கிராம் நிறையுள்ள பொன் மூக்கணியையும், நூற்று இருபது கிராம் நிறையுள்ள இரண்டு காப்புகளும் கொடுத்தார்". (தொடக்க. 24: 22). 
திருவிவிலியத்தில் இந்த வசனத்துக்குக் கீழே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது,  அரை செக்கேல் என்பது  எபிரேய பாடம். 
எனவே, ஆறு கிராம்  என்றால்  அரை செக்கேல்  என்கிறார்கள். 
ஆக, ஒரு  செக்கேல்  12  கிராம் ஆகிறது.
2.   லேவி.27:25. 
பரிசுத்த வேதாகமத்தில், 
"எல்லா  மதிப்பிலும் பரிசுத்த இடத்துச் சீக்கலே  உபயோகிக்கப்படும். ஒரு சீக்கல் என்பது இருபது ஓபோல்". 
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
"மதிப்பீடுகள் அனைத்தும் தூயகத்துச் செக்கேலின் படி  கணக்கிட வேண்டும். ஒரு செக்கேல் என்பது பதினொன்றரை கிராம்". (லேவி.27:25). 
ஆக, ஒரு செக்கேல் என்பது பதினொன்றரை கிராம் ஆகிறது.
3.    2 சாமு.14:26. 
பரிசுத்த வேதாகமத்தில், 
"அவனுடைய முடி அவன் தலைக்கு அதிக பாரமாயிருந்ததினால், ஆண்டுதோறும் அதை கத்தரிக்க வேண்டியதாயிருக்கும், கத்தரிக்கும் போது அவன் தலை மயிர் அரச நிறையின்படி இருநூறு சீக்கேல் நிறை உள்ள தாயிருக்கும்". 
மேற்கண்ட வசனம் திருவிவிலியத்தில் : 
" அவன் முடி வெட்டிக் கொள்ளும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தலைக்கு பாரமாயிருந்ததால்,  அவன் முடி வெட்டிக் கொள்வான் - அது அரச அளவையின்படி இரண்டு கிலோவுக்கு மேலாக இருக்கும்". (2 சாமு.14:26). 
இந்த வசனத்தின் படி 2 கிலோ என்றால் 2000 கிராம் அல்லது 200 செக்கேல் ஆகும். 
ஆக, 2000 கிராம் என்பதை 200 செக்கேல் கொண்டு வகுத்தால், 1செக்கேல் 10 கிராம் என்று வருகிறது.
ஆக, முதல் வசனத்தின் படி (ஆதி .24:22.)  1செக்கேல் 12 கிராம் ; 
இரண்டாம் வசனத்தின் படி ( லேவி.27:25.) 1செக்கேல் பதினொன்றரை கிராம் ; 
மூன்றாம் வசனத்தின் படி ( 2 சாமு.14:26) 1செக்கேல் 10 கிராம்.
இது விஷயமாக, பரிசுத்த வேதாகமத்தில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், திருவிவிலியத்தை படிப்போருக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ள ஒரு போலி பைபிள். 
இவ்வாறாக, திருவிவிலியம் ஒரே சீரான மொழிபெயர்ப்பாக அமையாததால், மக்களிடையே குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது வேதனையான விஷயம்.
சேனைகளின் ஆண்டவர் கூறுவதாவது: 
"ஆனால் நீங்கள் நெறி தவறினீர்கள், உங்களுடைய போதனையால் பலரை இடறி விழச் செய்தீர்கள்; லேவியோடு செய்த உடன்படிக்கையைக் கெடுத்து விட்டீர்கள் என்கிறார் சேனைகளின் ஆண்டவர். ஆதலால் எல்லா மக்கள் முன்னிலையிலும் உங்களை இழிவுக்கும் தாழ்வுக்கும் உள்ளாக்குவோம்; ஏனெனில், நம் வழிகளை நீங்கள் கடைப்பிடிக்கவுமில்லை; உங்கள் போதனைகளில் பாரபட்சமும் காட்டினீர்கள்". மலாக்கியா.2: 8 - 9. 
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 

....................... 

13.  திருவிவிலியம் ஒரு போலி பைபிள் :          
                               பாகம் - 13
கத்தோலிக்கத் திருச்சபையில் 25-04-1979 ம் நாள் போப்பாண்டவர் 2-ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட  "Nova Vulgata-Scripturarum Thesaurus" என்னும் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தின், தீர்ப்பாணையில் "எல்லா விவிலிய மொழிபெயர்ப்பு களும் இந்த புதிய வுல்காத்தா பைபிளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்" (ad eam versiones vulgarus referantur) என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், திருவிவிலிய முன்னுரையின் இரண்டாவது பாராவில், 
 "பழைய ஏற்பாடு எபிரேய பாடமான 'பிபிலியா எபிராயிக்கா' நூலையும், (Biblia Hebraica, Stuttgart Edition-Masoretic text) புதிய ஏற்பாடு விவிலிய சங்கங்களின் இணையத்தின் வெளியீடான கிரேக்க புதிய ஏற்பாட்டு நூலின் மூன்றாம் பதிப்பையும் (The Greek New Testament, UBS, third edition) சார்ந்து மொழி பெயர்க்கப்பட்டன". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தவர்கள் திருவிவிலியத்தில் இன்னும்  சில குறிப்புக்களை  கொடுத்து மக்களைக் குழப்பக் காரணம் என்னவோ? 
அதாவது; திருவிவிலியத்தில் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்கள்; 
1.    கீழ்க்கண்ட வசனங்கள், சில முக்கியமல்லாத கையழுத்துப் படிகளில் காணப்படுகிறது.  
அதாவது,  
( i ) மத்.5:44 ;  6:13 ;  19:9 ; 23:14 
(ii) மாற்கு. 9:29 ; 9:44 , 46; 11:26 ; 15:28;  
       16 : 9 -20 ; 
(iii)  உரோ. 16:24  
(iv)   1 அரு. 4:19
2.   கீழ்க்கண்ட வசனங்கள்,  சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 
அதாவது, 
(i)   மத்.12:47 
(ii)  மாற்கு 7:16  
(iii) எபேசியர்.  1: 1 
(iv) காட்சியாகமம்.12:18
3.   கீழ்க்கண்ட வசனங்கள்,  சில முக்கிய கையெழுத்துப்படிகளில் காணப்படுகிறது.  
அதாவது, 
(i)     லூக்.1:28;  
(ii)    1 கொரி. 13:3; 
(iii)    கலா.4:6
 4.  கீழ்க்கண்ட வசனங்கள், சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 
அதாவது 
(i)    மாற்கு. 7:16 ;  
(ii)   எபேசியர். 1:1;  
(iii)  காட்சியாகமம். 12:18
5.   கீழ்க்கண்ட வசனங்கள் சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 
அதாவது, 
சீராக் ஆகமம். 1:5 ; 1:7 ; 1:21 ; 3:19 ; 3:25 ; 4:23 ; 10:21 ; 11:15 ; 11:16 ; 13:14 ;16:15 ; 17:15 ; 17:16 ,18 ; 17:21 ; 18:2 ,3 ; 19:5 ; 19:18 ; 21:8 ; 21:25 ; 22:7-8 ; 24:18 ; 24 :24 ; 25 :12 ; 26 : 19 -27 ; 30:11-12 ; 31:5 ; 34:9
6.   கீழ்க்கண்ட வசனங்கள், பல முக்கிய கையெழுத்துப் படிவங்களில் காணப்படவில்லை. 
அதாவது, 
(i) மத்.16:2,3 ;மத் 17.21 ; 18:11) 
(ii) மாற்கு 14 : 68 
(iii) லூக். 11:4 ; 17:36; 22:43-44 ; 23:17; 23: 34 
(iv)  அரு. 5 : 3-4 ; 7:53 முதல் 8:11 வரை
7.    கீழ்க்கண்ட வசனங்கள், பல கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. 
அதாவது, 
1அரு. 2:20
8.   கீழ்க்கண்ட வசனங்கள், சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.  
அதாவது, 
(i)   மத்.5:44 ; 6:13 ;19:9 ; 23:14 
(ii)  மாற்கு. 9:29 ; 9:44-46 ; 11:26 ; 15:28 ; 16:9-20 
(iii) அப்.பணி. 8:37 ; 15:34 ; 24: 6-8  
(iv) உரோ. 16:24 
(v) 1 அரு.4:19
9.   கீழ்க்கண்ட வசனங்கள், சில பழைய சுவடிகளில் உள்ளது. 
அதாவது, 
ஞானாகமம்.2:23
10.   கீழ்க்கண்ட வசனங்கள், பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை. 
அதாவது 
(i)  மத்.16: 2-3 ; 17:21 ; 18:11 
(ii) மா ற்கு. 14:28 
(iii) லூக். 11:4 ; 17:36 ; 22:43-44 ; 23:17 ; 23:34  
(v ) அரு. 5:3-14 ; 7:53 ; 8:11
ஆக இத்தகைய கையெழுத்துப்படிகளைப் பற்றி எழுதியுள்ளதனால்,   
எந்த சுவடி உண்மையானது,  
எந்த சுவடியை நம்ப வேண்டும்,  
எதை நம்பக்கூடாது,  
என்பது பற்றி தெளிவாகச் சொல்லாமல், விசுவாசிகள் குழப்பியுள்ளதால் திருவிவிலியத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
" அதன் தீர்க்கத்தரிசிகள் தற்பெருமை பேசுகிறவர்கள், பிரம்மாணிக்கமற்ற மனிதர்கள்,  
அதன் அர்ச்சகர்கள் புனிதமானதைப் பங்கப்படுத்துகின்றனர். திருச் சட்டத்தை மீறி நடக்கிறார்கள்". செப்போனியாஸ் ஆகமம். 3 :5.  
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
.............................................................................................................................
14.  திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                                பாகம் : 14
திருவிவிலிய முன்னுரையின் இரண்டாவது பாராவில், 
 "பழைய ஏற்பாடு எபிரேய பாடமான 'பிபிலியா எபிராயிக்கா' நூலையும், (Biblia Hebraica, Stuttgart Edition-Masoretic text) புதிய ஏற்பாடு விவிலிய சங்கங்களின் இணையத்தின் வெளியீடான கிரேக்க புதிய ஏற்பாட்டு நூலின் மூன்றாம் பதிப்பையும் (The Greek New Testament, UBS, third edition) சார்ந்து மொழி பெயர்க்கப்பட்டன", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Bible Society of India, Banglore அதாவது, பிரிவினை சபையார்கள் அனைவரும்  சேர்ந்து  வெளியிட்ட "பரிசுத்த வேதாகமம்" என்னும்  பைபிள் முதல் பக்கத்தில் "இது எபிரேயு கிரேக்கு என்னும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது" என  தெரிவிக்கிறது. 
ஆக, திருவிவிலியம் மற்றும் பிரிவினை சபையார்கள் வெளியிட்ட பரிசுத்த வேதாகம் ஆகிய இரண்டுமே மூல மொழியாகிய எபிரேயம், கிரேக்கம் ஆகியவைகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், இரண்டு மொழிபெயர்ப்புக்கும்  வித்தியாசம் உள்ளது.  
ஆனால், திருவிவிலிய  மொழிபெயர்ப்பு, கெட்ட எண்ணத்துடன் மொழி பெயர்க்கப்பட்டதாகவேத் தெரிகிறது என்பதை கீழே கொடுக்கப்பட்ட சில உதாரணங்கள் மூலம்  அறிந்து கொள்ளலாம் .
1.  யோவான்.8:54. 
இந்த வசனம், திருவிவிலியத்தில்,  
"என்னை பெருமைப்படுத்துபவர் என் தந்தையே  அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்று  சொல்கிறீர்கள்". 
இதே  வசனம்,  புரோட்டஸ்டான்டார்  வெளியிட்ட பரிசுத்த வேதாகமத்தில், 
"என் பிதா என்னை  மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று சொல்கிறீர்கள்"(யோவான்.8:54). 
இதே  வசனம், ரோமன் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில், 
"என் தந்தையே என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரையே நீங்கள் நம் கடவுள் என்று சொல்லுகிறீர்கள்". (அருளப்பர். 8:54). 
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும் "கடவுள் அல்லது தேவன்" என்று சொல்கின்றன. ஆனால், திருவிவிலியம், "தந்தை" என்று மொழி பெயர்த்துள்ளது.
2. மாற்கு. 2.5. 
இந்த வசனம், திருவிவிலியத்தில்,  
"இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு" (மாற்கு.2:5).  
இதே  வசனம்,  புரோட்டஸ்டான்டார்  வெளியிட்ட பரிசுத்த வேதாகமத்தில்,  
"இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு" (மாற்கு.2:5). 
இதே  வசனம், ரோமன் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில்
"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக்கண்டு" (மாற்கு.2:5) என்றும் உள்ளன. 
ஆக, கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும், விசுவாசம் என்று சொல்வதை திருவிவிலியம் மட்டும் |நம்பிக்கை என்று மொழி பெயர்த்துள்ளது.
3.  லூக்.8:48.  
இந்த வசனம், திருவிவிலியத்தில்,  
"மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது அமைதியுடன் போ" என்றார்". 
இதே  வசனம்,  புரோட்டஸ்டான்டார் வெளியிட்ட பரிசுத்த வேதாகமத்தில், 
"மகளே திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது சமாதானத்தோடே போ என்றார்"(லூக்.8:48).  
இதே  வசனம், ரோமன் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில், 
"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய் போ என்றார்" (லூக்.8:48). 
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும் 'விசுவாசம்' என்று சொல்வதை திருவிவிலியம் 'நம்பிக்கை' என்றும் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும் ' சமாதானம்' என்று சொல்வதை  'அமைதி' என்கிறது.
4.  லூக்.1:80 
இந்த வசனம், திருவிவிலியத்தில்,  
"குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார்".  
இதே வசனம்  புரோட்டஸ்டான்டார் வெளியிட்ட பரிசுத்த வேதாகமத்தில், 
"அந்த பிள்ளை வளர்ந்து ஆவியிலே பலங்கொண்டு"(லூக்.1: 80). என்றும் உள்ளது.  
இதே  வசனம், ரோமன் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில், 
"பாலனோ, ஆன்ம வலிமையோடு வளர்ந்து வந்தார்"(லூக்.1:80) என்றும்  உள்ளது. 
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும். "ஆவியிலே பெலங்கொண்டு" அல்லது "ஆன்ம வலிமை" என்றதை "மன வலிமை" என்று மாற்றியுள்ளனர்.இங்கே கவனிக்க வேண்டியது.  மன வலிமை என்பது உலக வாழ்க்கையைக் குறிக்கிறது.
5.  லூக்.21:19. 
இந்த வசனம், திருவிவிலியத்தில்,  
"நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்". இதே வசனம்  புரோட்டஸ்டான்டார்  வெளியிட்ட பரிசுத்த வேதாகமத்தில் "உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக் கொள்ளுங்கள்" (லூக்.21:19). 
இதே  வசனம், ரோமன் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில்"நிலைத்து நின்றால் உங்கள் ஆன்மாக்களை மீட்டுக் கொள்வீர்கள்" (லூக்.21:19). 
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும், "ஆன்மா"என்கிறது. ஆனால் திருவிவிலியம் உலக  சம்மந்தமான வாழ்வைப் பற்றித் தெரிவிக்கிறது. 
6.  எபி.13:17. 
இந்த வசனம், திருவிவிலியத்தில்,  
"உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள், அவர்களுக்குப் பணிந்திருங்கள், அவர்கள் உங்களைப் பற்றி கணக்கு கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள்" 
இதே  வசனம்  புரோட்டஸ்டான்டார்  வெளியிட்ட பரிசுத்த வேதாகமத்தில் "உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால்" (எபி.13:17). 
இதே  வசனம், ரோமன் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில்"உங்களைக் குறித்துக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதால், உங்கள் ஆன்ம நலனில் விழிப்பாய்". (எபி.13:17).  
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும், "ஆன்ம நலன்" என்கின்றது. ஆனால், திருவிவிலியம் ''நலன்" என்று உலக வாழ்க்கையைப் பற்றித் தெரிவிக்கிறது.
7.  நீதித் தலைவர்கள்.5:21. 
  இந்த வசனம், திருவிவிலியத்தில்,  
" என் உயிரே; வலிமையுடன் பீடு நடை போடு",  
இதே  வசனம்  புரோட்டஸ்டான்டார்  வெளியிட்ட பரிசுத்த வேதாகமத்தில்,"என் ஆத்துமாவே நீ பலவான்களை மிதித்தாய்"(நியாயதிபதிகள்.5:21 ). 
இதே  வசனம், ரோமன் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில், "என் ஆன்மாவே வ லியோரை மிதித்துத் தள்ளு" (நீதிபதிகள்  ஆகமம்.5:21) என்றும் உள்ளன.  
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும் "ஆன்மா" என்பதை திருவி்விலியம் "உயிர்"  என்கிறது. 
உயிரும் ஆன்மாவும் ஒன்றா? விசுவாசிகளே சிந்தியுங்கள். 
8.   லூக்.6:25. 
  இந்த வசனம், திருவிவிலியத்தில்,  
 "இப்போது உண்டு கொழுத்திருப்போரே ஐயோ, உங்களுக்குக் கேடு " இதே  வசனம்  புரோட்டஸ்டான்டார்  வெளியிட்ட பரிசுத்த வேதாகமத்தில் "திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ "(லூக்.6:25). 
இதே  வசனம், ரோமன் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில், "திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ கேடு"(லூக்.5:25)  என்றும் உள்ளது.  
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும், "திருப்தியாயிருப்பவர்களே" என்று சொல்கிறது ஆனால், திருவிவிலியம் "உண்டு கொழுத்திருப்போரே" என்கிறது. எவ்வளவு  தரம் கெட்ட மட்டமான மொழிபெயர்ப்பு. 
9.  ஏசா.7:14 
  இந்த வசனம், திருவிவிலியத்தில்,  
"இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பாள்".  
இதே  வசனம்  புரோட்டஸ்டான்டார்  வெளியிட்ட பரிசுத்த வேதாகமத்தில் "இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்"(ஏசா.7:14). 
இதே  வசனம், ரோமன் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தில், "இதோ கன்னிப் பெண் கருத்தாங்கி " (இசையாஸ்.7:14 ) என்பதைக் காண முடிகிறது 
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமும், புரோட்டஸ்டான்டாரின் பரிசுத்த வேதாகமும் "கன்னி"  என்கிற வார்த்தையில் உறுதியாக உள்ளது.  ஆனால் திருவிவிலியம், மட்டும்  
'இளம் பெண்" என்று சொல்கிறது . 
ஆக  திருவிலிலியம் உண்மையை உரைக்காத, கெட்ட உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஒரு போலி பைபிள். 
அர்ச். அருளப்பர் எழுதிய காட்சியாகமத்தில் (திருவெளிப்பாடு) எழுதிய கடைசி வார்த்தைகள், அதாவது,
"இந்நூலிலுள்ள இறைவாக்குகளைக் கேட்கிற ஒவ்வொருவனையும் நான் எச்சரிக்கிறேன். இவ்வாக்குகளில் ஒருவன் எதையாவது சேர்த்தால், இந்நூலில் விளக்கியுள்ள வாதைகளை எல்லாம் கடவுள் அவனுக்கு அவன் தலையில் சேர்த்து விடுவார். இந்நூலிலுள்ள இறைவாக்குகளில் எதையாவது ஒருவன் எடுத்து விட்டால், இந்நூலில் குறிப்பிட்டுள்ள  வாழ்வின் மரத்திலும் பரிசுத்த நகரிலும் அவனுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்து விடுவார்". (திருவெளிப்பாடு. 22:17-19). 
மேற்கண்ட, மேற்கோள்களை ஒப்புமைப் படுத்திப் பார்த்தால், திருவிவிலியம் ஒரு தப்பறையான மொழிபெயர்ப்பு என்பதை எளிதாகக் கண்டு கொள்ள முடிகிறது.
கத்தோலிக்கர்களே, திருவிவிலியத்தை நம்பி மோசம் போகாதீர்கள்.
திருவிவிலியத்தையும், கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தையும் எடுத்து ஒப்புமைப்படுத்தி படித்துப் பாருங்கள். ஒவ்வொரு வரியிலுமே வித்தியாசத்தைக் காண்பீர்கள்.  
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 
.................................................................................................................................
15.  திருவிவிலியம் ஒரு போலி பைபிள்.  
                                பாகம் : 15
பரிசுத்த வேதாகமத்தையே புரட்டிப் போட்ட திருவிவிலியம். தப்பறைகளையே கொண்டது.  
வரிக்கு வரி, வார்த்தைக்கு  வார்த்தை வித்தியாசம். 
பொதுவாக, ஒரு புத்தகத்தில்,  தலைப்புகள் இடம்பெறும். அதை ஒட்டி அதன் விபரம் அமையும். 
பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட சிறு சிறு தலைப்புக்கள் அப்படியே தலைகீழாக மாற்றி எழுதப்பட்டுள்ளன.  
அவைகளைப் பற்றிய விபரம்: 
1.   மத். 1:8. 
 பரிசுத்த வேதாகமத்தில்,  
 "கன்னியிடம் இயேசு பிறந்தது", என்பது, 
 திருவிவிலியத்தில்,  
"இயேசுவின் பிறப்பு"  
என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  
இங்கே  "கன்னி" என்கிற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது ஏனோ?.
2.    மத்.4:23. 
பரிசுத்த வேதாகமத்தில்,  
 "புதுமைகள்", என்பது  
 திருவிவிலியத்தில், 
"திரளான மக்களுக்குப் பணி புரிதல்",  
என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
 இங்கே "புதுமை"  நீக்கப்பட்டுள்ளது ஏனோ?
3.    மாற்கு.6:53. 
பரிசுத்த வேதாகமத்தில், 
  "கெனசரேத்தில் புதுமைகள்", என்பது 
திருவிவிலியத்தில், "கெனசரேத்தில் நலமளித்தல்", என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  
"புதுமை" என்று எழுதுவதால் என்ன தீங்கு என்று தெரியவில்லை. 
4.    மத்.14:13. 
பரிசுத்த வேதாகமத்தில்,  
"ஐந்து அப்பம் பலுகியது", என்பது 
 திருவிவிலியத்தில்,  
"ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் "  
என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
5.    மத்.15:32. 
பரிசுத்த வேதாகமத்தில்,   
" ஏழு அப்பம் பலுகுதல்", என்பது  
திருவிவிலியத்தில்,  
"நாலாயிரம் பேருக்கு உணவளித்தல்",  
என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
6.    மத்.7:1. 
பரிசுத்த வேதாகமத்தில்,   
"தீர்ப்பிடாதே", என்பது  
திருவிவிலியத்தில்,  
"தீர்ப்பு அளித்தல்",  
என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
7.  லூக்.6:36. 
 பரிசுத்த வேதாகமத்தில்,  
 "தீர்ப்பிடாதீர்கள்", என்பது  
திருவிவிலியத்தில்,  
"தீர்ப்பிடுதல்",  
என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  
தீர்ப்பிடாதே என்பதில் உள்ள நீதிப் போதனை "தீர்ப்பிடுதல்" என்னும் தலைப்பில் இல்லை. 'கொலை செய்யாதே' என்பதும் 'கொலை' என்பதும் ஒன்றல்ல.
8.  மத்.7: 7. 
பரிசுத்த வேதாகமத்தில்,  
"செபத்தின் வல்லமை" என்பது  
திருவிவிலியத்தில்,  
"வேண்டுதலின் விளைவு",  
என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
9.  மத்.16:13. 
 பரிசுத்த வேதாகமத்தில்,  
"இராயப்பரின் விசுவாச  அறிக்கை" என்பது,  
திருவிவிலியத்தில்,  
"இயேசுவைப்  பற்றிய பேதுருவின்  அறிக்கை", 
என  மாற்றப்பட்டுள்ளது.  
10.  மத். 22:41.  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"மெசியா தாவீதின் மகனும் ஆண்டவரும்" என்பது,  
திருவிவிலியத்தில்,  
"தாவீது  மகன்  பற்றிய  விளக்கம்"  
என  மாற்றப்பட்டுள்ளது. தாவீது மகன் என்று சொன்னால், எந்த தாவீது என கேட்க தோன்றுகிறதல்லவா?
11.  மாற்கு.14:22. 
பரிசுத்த வேதாகமத்தில், 
 "நற்கருணையை ஏற்படுத்துதல்", என்பது,  
திருவிவிலியத்தில்,  
"ஆண்டவரின் திருவிருந்து"  
என  மாற்றப்பட்டுள்ளது. நற்கருணை என்கிற விளக்கம் திருவிருந்தில் வெளிப்படவில்லையே?
12.   மாற்கு.14:1.  
பரிசுத்த வேதாகமத்தில், 
 "இயேசுவின் திருப்பாடுகளும் உயிர்த்தெழுதலும்", என்பது,   
திருவிவிலியத்தில், 
 "மானிட மகன்  முழுமையாய்  வெளிப்படுத்தப்படல்; இயேசுவைக்  கொல்ல சதித் திட்டம்" , 
என  மாற்றப்பட்டுள்ளது. உயிர்த்தெழுதலை மறைக்கக் காரணம் என்னவோ? 
13.    லூக்.11:1.  
பரிசுத்த வேதாகமத்தில்,  
"கர்த்தர் கற்பித்த  செபம்", என்பது, 
 திருவிவிலியத்தில்,  
"இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்தல்"  
என மாற்றப்பட்டுள்ளது. 
14.  அருளப்பர்.10:22. 
 பரிசுத்த வேதாகமத்தில், 
 "இயேசு கடவுளுடைய மகன்", என்பது  
 திருவிவிலியத்தில்,  
"யூதர்கள்  இயேசுவை  ஏற்க மறுத்தல்",  
என  மாற்றப்பட்டுள்ளது. 
15. கொலோ.3:1. 
பரிசுத்த வேதாகமத்தில்,  
"உயிர்த்த இயேசு  புது வாழ்வுக்கு  ஊற்று", என்பது  
 திருவிவிலியத்தில்,  
"புதுப்பிக்கப்படும் மனித இயல்பு"  
என மாற்றப்பட்டுள்ளது. 
எல்லாவற்றிற்கும் மேலாக, திருவிவிலியம் வெளியிடும் போது,  நினைவு  மலர் ஒன்று  வெளியிட்டார்கள்,  அதில் பக்கம் 63-ல்,  ஒரு மேதாவி, "கத்தோலிக்க விவிலியத்திலுள்ள பொருத்தமற்ற தலைப்பு நீக்கப்பட்டு, பொருத்தமான  தலைப்பு இடப்பட்டுள்ளது" என்று  எழுதியுள்ளார். இதை படிக்கிற நீங்களே, எது பொருத்தமான தலைப்பு என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். 
"ஆதலால், மேய்ப்பர்களே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார். நம் உயிர்மேல் ஆணை. மேய்ப்பன் இல்லாததால் நம்முடைய ஆடுகள் கொள்ளையிடப் பட்டன. காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாகின; நம் ஆயர்களோ நமது மந்தையைக் கண்காணிக்கவில்லை; மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்டார்கள். ஆகையால் மேய்ப்பர்களே, ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம்  நம்முடைய மேய்ப்பர்களுக்கு எதிராக வந்து, நமது மந்தையை  அவர்கள்  கையிலிருந்து மீட்டுக் கொண்டு, ஆடுகளை மேய்க்கும் வேலையிலிருந்தது அவர்களை நீக்கி விடுவோம்"(எசேக்.34:7-10). 
ஆக திருவிவிலியம், ஒரு தப்பறையான  போலி பைபிள் 

கத்தோலிக்கர்களே, திருவிவிலியத்தை நம்பி மோசம் போகாதீர்கள். 
  திருவிவிலியம் ஒரு போலி பைபிள். என பாகம் - 1 முதல் 15 வரை எழுதியுள்ளேன்.  இத்துடன் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
திருவிவிலியத்தையும், கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தையும் எடுத்து ஒப்புமைப்படுத்தி படித்துப் பாருங்கள். ஒவ்வொரு வரியிலுமே வித்தியாசத்தைக் காண்பீர்கள்.  
நன்றி. 
அன்புடன், 
G. அலெக்ஸ் பென்சிகர், 
அட்வகேட் 
+91-94440 22733  
நண்பர்களுக்கு அன்பான, பணிவான ஒரு வேண்டுகோள் : 
நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சுப காரியங்களின் போது, GIFT கொடுக்கும் போது, "கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தை" பரிசளியுங்கள். இது எல்லோருக்கும் பிரயோஜனமாக இருக்கும்.  
 இறைவன் நிறைவான ஆசீரை தேவமாதா வழியாக உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும்   வழங்குவாராக.  
குறிப்பு :   
பரிசுத்த வேதாகமம் இப்போதும் கிடைக்கிறது.   
(திருவிவிலியத்துக்கு முன்பு வெளியிடப்பட்டது).  
தேவைப்பட்டோர் அணுகவும் .  
Thiru B. FRANCIS XAVIER,  
No .108/82, "அரசி மரியகம்",  
ஆதிசக்திபுரம்,  
அங்கம்மாள் காலனி,  
சேலம் - 9.  
Mobile No. +91- 99443 58435  

Comments

Trending

THE HOLY BIBLE WAS TRANSLATED INTO “TAMIL LANGUAGE IN 1995” BY THE CATHOLIC BISHOPS OF TAMILNADU(SOUTH INDIA) IS TOTALLY CONTRADICTORY TO THE DECREE “ SCRIPTURARUM THESAURUS” ISSUED BY HIS HOLINESS POPE JOHN PAUL II DATED APRIL 25, 1979. THE TRANSLATED BIBLE IS KNOWN AS ‘ THIRUVIVILIAM”, IT IS DEVIATED FROM THE ORIGINAL BIBLE, DILUTED THE TRUTH AND DISTORTED THE FACTS. HOLY SEE HAVE BLIND EYE ON ALL THESE ERRONEOUS TRANSLATIONS.